Watch Video: எடுக்க எடுக்க வந்துகிட்டே இருக்கு..! ஒரே கண்ணில் 23 லென்ஸ்.. 'ஷாக்'கில் உறைந்த டாக்டர்..!
அவருக்கு சமீப நாட்களாக காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது. போட்ட லென்ஸை எடுக்காமல் மறந்துவிட்டு, தொடர்ந்து 23 நாட்கள் புதிய லென்ஸ்களை மேலே மேலே அணிந்து முடித்துள்ளார்.
கலிபோர்னியாவில் பெண் ஒருவர் தான் போட்ட லென்ஸை கழற்றாமலேயே 23 லென்ஸ்களை அதன்மீது அணிந்து வந்ததை வீடியோவாக வெளியிட்ட மருத்துவரின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி உள்ளது.
கண்ணில் 23 லென்ஸ்கள்
பாதிக்கப்பட்ட பெண் தன் கண்ணில் தொடர்ந்து வலி இருந்து வந்துள்ளதால் கவலையாக இருந்து வந்துள்ளார். அதை சரி செய்வதற்காக, அவர் ஒரு கண் மருத்துவரிடம் சென்று கண்களைப் பரிசோதிக்க முடிவு செய்துள்ளார். பரிசோதனை செய்த பிறகுதான் அவருக்கு என்ன அசௌகரியம் ஏற்பட்டது என்று புரிந்துள்ளது. அவருக்கு சமீப நாட்களாக காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது. போட்ட லென்ஸை எடுக்காமல் மறந்துவிட்டு, தொடர்ந்து 23 நாட்கள் புதிய லென்ஸ்களை மேலே மேலே அணிந்து முடித்துள்ளார்.
View this post on Instagram
விடியோ வெளியிட்ட டாக்டர்
கிட்டத்தட்ட இருபது ஆண்டு கால அனுபவமுள்ள கண் மருத்துவரான டாக்டர் கேடரினா குர்தீவா, இதுபோன்ற வழக்கை தான் பார்த்ததில்லை என்று கூறி உள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கமான 'கலிஃபோர்னியா ஐ அசோசியேட்ஸ்' இல் இதற்கான வீடியோவை வெளியிட்டார். அந்த விடியோவில் அவர் பெண்ணின் கண்ணிலிருந்து மெல்லிய லென்ஸ்களை அகற்றுவதைக் காணலாம்.
விடியோ கேப்ஷன்
"ஒரு அரிய நிகழ்வில், இவர் இரவில் காண்டாக்ட் லென்ஸ்களை அகற்ற "மறந்து" தினமும் காலையில் புதிய ஒன்றைப் போட்டுக் கொண்டே இருந்துள்ளார். தொடர்ந்து 23 நாட்கள் இதனை செய்துள்ளார். எனது கிளினிக்கில் நேற்று கான்டாக்ட் இந்த 23 லென்ஸ்களை கொத்தாக டெலிவரி செய்தேன்,” என்று வீடியோவிற்கு கீழ் எழுதப்பட்ட தலைப்பு கூறுகிறது.
கமெண்ட்ஸ்
இந்த வீடியோ சில நாட்களுக்கு முன்பு பதிவேற்றம் செய்யப்பட்டு 5.1 மில்லியனுக்கும் அதிகமான நபர்களால் பார்க்கப்பட்டு, வைரலாகியுள்ளது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். "நான் இந்த பெண்ணுக்கு கண்ணாடிகளை பரிந்துரைக்கிறேன்; அவளுடைய வாழநாளில் இனி காண்டாக்ட் லென்ஸ் கொடுக்கக்கூடாது", என்று ஒரு பயனர் கூறினார். "இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது" என்று மற்றொரு பயனர் எழுதினார். "சரி பெண்ணே, நீங்கள் போட்ட காண்டாக்ட் லென்ஸ் எல்லாம் எங்கு செல்கின்றன என்று நீங்கள் நினைத்தீர்கள்?" என்று மற்றொரு பயனர் எழுதினார்.