மேலும் அறிய
Advertisement
Sri Lanka- china: இலங்கைக்கு வருகைதரும் சீனாவின் விண்வெளி கண்காணிப்பு கப்பல்; இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?
இலங்கைக்கு வருகைதரும் சீனாவின் கண்காணிப்பு கப்பல்; இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?
சீனாவின் ஆய்வு கப்பல்:
சீனாவின் விஞ்ஞான ஆய்வு கப்பல் எனக் கூறப்படும் விண்வெளி தொடர்பான ஆய்வுகளை நடத்தும் கப்பல் ஒன்று இலங்கை வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வருகின்ற ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சைனாஸ் யுவான்வாங் - 5 என்ற இந்த கப்பல் வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கப்பல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆய்வுக் கப்பலானது என்ன நோக்கத்திற்காக இலங்கையின் தென்பகுதியான ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகிறது என்பது இன்னும் தெரியப்படுத்தப்படவில்லை. சீனாவின் விண்வெளி ஆய்வு சம்பந்தமான இந்த கப்பல் இலங்கையின் தென்பகுதிக்கு வருவது இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என ஏற்கனவே தகவல்கள் வெளியானதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ஹம்பாந்தோட்டை துறைமுக பகுதியானது சீனாவின் கைவசமே தற்போது இருக்கிறது என்பதும் ஒரு கவலையான தகவல் தான். ஆகையால் சீனா தற்போது அந்த துறைமுகத்தை தமது பாவனைக்காக பயன்படுத்த தொடங்கி இருக்கிறது.
ஹம்பாந்தோட்டை துறைமுகம்:
சீன கப்பல், இந்தியப் பெருங்கடல் மண்டலத்தின் வடமேற்குப் பகுதியில் செயற்கைக்கோள் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்று எதிர்வு கூறப்படுகிறது. கொழும்பில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் இலங்கையின் தென் பகுதியில் அதிக சிங்களவர்கள் வாழும், ராஜபக்சவினரின் சொந்த ஊரான ஹம்பாந்தோட்டையில் அமைந்திருக்கிறது இந்த துறைமுகம். இந்த ஹம்பாந்தோட்டை துறைமுகம், அதிக வட்டியுடனான சீன கடனுதவியில் நிர்மாணிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இந்த துறைமுகத்தின் மீது சீனாவின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. இந்த துறைமுக நிர்மாணத்திற்காக சீனாவிடம் இருந்து பெற்ற கடனை இலங்கையால் திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
சீனா ஆக்கிரமிப்பு:
இலங்கையால கடனை திருப்பிச் செலுத்த முடியாததால், ஹம்பாந்தோட்டை துறைமுகம் 99 வருட குத்தகைக்கு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆகவே தற்போது இந்த துறைமுகத்தை சீனா பயன்படுத்த தொடங்கி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். சைனாஸ் யுவான்வாங் - 5 இந்த விண்வெளி கண்காணிப்பு கப்பல், விண்வெளி, தரை தகவல் பரிமாற்றத்தை செயற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதை மற்றும் முக்கியமான தகவல் பரிமாற்றங்களை பெறுவதற்கான கட்டமைப்புகள் இந்த கப்பலில் காணப்படுகின்றன.
இலங்கைக்கு வருகை தரும் சீனாவின் விண்வெளி கண்காணிப்பு கப்பலால், இந்தியாவுக்கு சற்று நெருக்கடி இருக்க வாய்ப்பு உள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion