9 மனைவி.. 1 விவாகரத்து.. இன்னும் 2 பெண்ணுக்கு வெயிட்டிங்.. மாடலின் விநோத திருமணங்கள்..
9 பேரை திருமணம் செய்த மாடல் ஒருவர் உலகம் முழுவதும் மிகவும் பிரபலம் அடைந்தார்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிரபல மாடல் ஒருவர் கடந்த 2020ஆம் ஆண்டு மிகவும் பிரபலம் அடைந்தார். அவர் பிரபலம் அடைய காரணம் மாடலிங் தொழில் அல்ல. அவர் தன்னுடைய 9 காதலிகளையும் திருமணம் செய்து கொண்டிருந்தார் அதுவே அவர் பிரபலம் அடைய முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் அவருடைய 9 மனைவிகளிலிருந்து ஒருவர் தற்போது விவாகரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்காரணமாக அவர் மீண்டும் பிரபலம் அடைந்துள்ளார்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் அர்தூர் உஸ்ரோ. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு தன்னுடைய 9 காதலிகளையும் திருமணம் செய்தார். இதன்மூலம் அவர் மிகவும் பிரபலம் அடைந்தார். அந்த 9 பேரில் ஒருவர் உஸ்ரோவை திடீரென விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இதை உஸ்ரோவே தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர், “என்னுடைய மனைவி ஒருவர் நான் முழுவதுமாக அவருக்கு மட்டும் சொந்தமாக இருக்க வேண்டும் என்று கேட்டார். அது எனக்கு சரியாக படவில்லை. அது மீதமுள்ள 8 பேருக்கு சரியாக இருக்காது என்று தோன்றியது. நான் நினைத்தை போலவே என்னுடைய மற்ற மனைவிகளும் நினைத்தனர். இதன்காரணமாக அவரை நான் விவாகரத்து செய்ய உள்ளேன்.
என்னுடைய ஆசை எப்போதும் 10 மனைவிகளுடன் வாழ்வதுதான். மேலும் எனக்கு தற்போது ஒரு குழந்தை மட்டுமே உள்ளது. என்னுடைய அனைத்து மனைவிகளிடனும் குழந்தை பெற்றுகொள்ள வேண்டும் என்பது என் விருப்பம். ஏனென்றால் ஒருவர் அல்லது இருவருடன் மட்டும் குழந்தை பெற்று கொள்வது மற்றவர்களுக்கு அநியாயமாக அமைந்துவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.
இவருடைய திருமணம் பிரேசில் தலைநகர் சாவோ போலாவில் நடைபெற்றது. பிரேசில் நாட்டில் ஒருவர் அதிக பெண்களை திருமணம் செய்யும் முறை சட்டப்படி செல்லாது. ஆகவே உஸ்ரோவின் திருமணம் பிரேசில் நாட்டின் சட்டப்படி செல்லாது. ஒருவர் ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து கொள்ளும் முறையை எதிர்ப்பதற்காகதான் உஸ்ரோ 9 பெண்களை திருமணங்கள் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:”நீயாவது பொழச்சுக்கோ..” குழந்தைகளின் முதுகில் குடும்ப விவரத்தை எழுதிவைக்கும் உக்ரைன் அம்மாக்கள்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்