மேலும் அறிய

விழுப்புரத்தில் விரைவில் இரண்டாவது புத்தகத் திருவிழா - எத்தனை அரங்குகள்? - முழு விவரம் இதோ

விழுப்புரத்தில் இரண்டாவது புத்தகத்திருவிழா 02.02.2024 முதல்‌ 11.02.2024 வரை நடைபெறவுள்ளது.

விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌, மாவட்ட நிர்வாகம்‌ மற்றும்‌ தென்னிந்திய புத்தக விற்பனையாளர்‌ மற்றும்‌ பதிப்பாளர்கள்‌ சங்கம்‌ (5,&1.&51) ஆகியவை இணைந்து நடத்தும்‌, இரண்டாவது புத்தகத்திருவிழா 02.02.2024 முதல்‌ 11,02.2024 வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ‌ டாக்டர்‌ சி.பழனி அறிவித்துள்ளார்.

விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌, மாவட்ட நிர்வாகம்‌ மற்றும்‌ தென்னிந்திய புத்தக விற்பனையாளர்‌ மற்றும்‌ பதிப்பாளர்கள்‌ சங்கம்‌ (BAPASI) ஆகியவை இணைந்து நடத்தும்‌, இரண்டாவது புத்தகத்திருவிழா விழுப்புரம்‌ புதிய பேருந்து நிலையம்‌ அருகிலுள்ள நகராட்சித்‌ திடலில்‌ வருகிற பிப்ரவரி 02-ஆம்‌ தேதி முதல்‌ பிப்ரவரி 11-ஆம்‌ தேதி வரையில்‌ 4௦ நாட்கள்‌  தினமும்‌ காலை 10.00 மணி முதல்‌ இரவு 9.00 மணி வரை நடைபெறவுள்ளது. இதில்‌ 100 புத்தக அரங்குகள்‌ அமைக்கப்பட உள்ளது.

அரங்கில்‌ கலை, இலக்கியம்‌, இலக்கணம்‌, வரலாறு, புதினம்‌. கவிதை. பண்பாடு, அறிவியல்‌, ஆன்மிகம்‌, போட்டி தேர்விற்கான புத்தகங்கள்‌, சரித்திர மற்றும்‌ சமூக நாவல்கள்‌ என அனைத்து விதமான புத்தகங்களும்‌ குழந்தைகள்‌ முதல்‌ பெரியவர்கள்‌ வரை பயன்பெறும்‌ வகையில்‌ அனைவருக்கும்‌ ஏற்ற வகையில்‌ புத்தகங்கள்‌ இடம்‌ பெறவுள்ளன. புத்தக கண்காட்சி நடைபெறும்‌ நாட்களில்‌, தினந்தோறும்‌. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு தனித்திறன்‌ போட்டிகள்‌, கலைநிகழ்ச்சிகள்‌ மற்றும்‌ பட்டிமன்றங்களும்‌, மாலை நேரத்தில்‌ பல்வேறு எழுத்தாளர்கள்‌, சிறப்பு பேச்சாளர்கள்‌ பங்கேற்கும்‌ பட்டிமன்றம்‌ மற்றும்‌ சொற்பொழிவு நிகழ்ச்சிகளும்‌ மற்றும்‌ முக்கிய பிரமுகர்களின்‌ கலைநிகழ்ச்சிகளும்‌ நடைபெறவுள்ளது.

இது தவிர வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை சார்பில்‌ குறைந்த விலை மரக்கன்றுகள்‌ விற்பனை செய்தல்‌, குழந்தைகள்‌ மகிழும்‌ வகையில்‌ பொழுதுபோக்கு அம்சங்களும்‌ விளையாட்டு நிகழ்ச்சிகளும்‌ இடம்பெறவுள்ளது. எனவே, பொதுமக்கள்‌, மாணவ மாணவிகள்‌, பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும்‌ இளைஞர்கள்‌, தங்களது அறிவுசார்ந்த தேடலுக்கான களமாகவும்‌, பெற்றோர்கள்‌ தங்கள்‌ குழந்தைகளை அழைத்து வந்து புத்தகங்களை வாங்கிக்கொடுத்து நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுக்கும்‌ இடமாகவும்‌, நண்பர்கள்‌ பரிசாக புத்தகங்களையே வழங்கிடும் முறையை ஏற்படுத்திக்கொள்ளும்‌ விதமாகவும்‌. இந்த புத்தக திருவிழாவை நல்ல முறையில்‌ பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும்‌, இவ்விழாவில்‌ சிறப்பு அழைப்பாளர்கள்‌ பங்கேற்கும்‌ நிகழ்ச்சிகளில்‌, உள்ளுர்‌ எழுத்தாளர்களை சிறப்பிக்கும்‌ வகையில்‌, அவர்களின்‌ தயார்‌ நிலையில்‌ உள்ள புத்தகங்களை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, புத்தகத்தை வெளியிட விரும்பும்‌ எழுத்தாளர்கள்‌, உள்ளுர்‌ எழுத்தாளர்களை உள்ளடக்கி மாவட்ட ஆட்சியர்‌ அவர்களால்‌ அமைக்கப்பட்டுள்ள குழுவிடம்‌, புத்தகத்தின்‌ இரண்டு பிரதிகளுடன்‌ 18.012024-க்குள்‌ நேரில்‌ தொடர்பு கொள்ளலாம்‌ என தெரிவிக்கப்படுகிறது.

ஒந்நேர்வில்‌, விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌, புத்தக வாசிப்பினை ஊக்குவிக்கும்‌ வகையில்‌, பெருந்திரல்‌ புத்தக வாசிப்பு நடவடிக்கைகளின்‌ பொருட்டு பொதுமக்கள்‌, தன்னார்வலர்கள்‌, தொண்டுநிறுவனங்கள்‌, கல்வி நிறுவனங்கள்‌, வணிக நிறுவனங்கள்‌ தங்களது பங்களிப்பினை கீழ்கண்ட வங்கி கணக்கில்‌ வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Account Details

Bank Account Name :  Villupuram Book Fair 2023-2024

Bank Account  Number : 7442959394

IFSC Code : IDIB000V024

MICR Code : 605019019

Bank Name : Indian Bank Villupuram

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!
Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vck

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!
Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Tamilnadu RoundUp: உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 30ம் தேதி கண்ணாடி பாலம் திறப்பு - இதுவரை தமிழகத்தில்
Tamilnadu RoundUp: உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 30ம் தேதி கண்ணாடி பாலம் திறப்பு - இதுவரை தமிழகத்தில்
Ashwin:
Ashwin: "டேய் தகப்பா என்ன இதெல்லாம்?" அப்பா குற்றச்சாட்டுக்கு அஸ்வின் தந்த விளக்கத்தை பாருங்க!
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Embed widget