கோலிவுட்டில் DRUGS PARTY ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி? நாசம் செய்த போதை Actor Srikanth Arrested
தமிழ் திரையுலக பிரபலங்கள் தற்போது போதையில் தள்ளாடி வருகிறது. பல பிரபலங்கள் போதையில் சிக்கியிருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால், 2002ம் ஆண்டு வெளியான ரோஜாக்கூட்டம் என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகி தமிழ் சினிமாவிற்கு புதியதொரு நட்சத்திரம் கிடைத்துவிட்டார் என்று எதிர்பார்க்க வைத்தார். அவர் ஒரு கதாநாயகனாக தனது பயணத்தை தொடங்குவதற்கு முன்பு ஏராளமான சிரமங்களை எதிர்கொண்டுள்ளார். கும்பகோணத்தைப் பூர்வீகமாக கொண்ட ஸ்ரீகாந்தின் தந்தை ஒரு வங்கி ஊழியர். ஸ்ரீகாந்த் அண்ணன் டெங்கு காய்ச்சல் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார். அண்ணனின் மறைவிற்கு பிறகு சினிமாவில் முழு கவனத்தை செலுத்தினார். அதற்காக சென்னை வந்த அவர் தொடக்க காலத்தில் ஏராளமான சிரமங்களைச் சந்தித்துள்ளார்.
தந்தை வங்கி அதிகாரி என்றாலும் சினிமாவில் வாய்ப்பு தேடியதால் பகுதி நேர வேலைகளுக்குச் சென்றுள்ளார். பணத் தேவைக்காக பெட்டிக்கடைகளில் பணியாற்றியுள்ளார். கூல் டிரிங்க்ஸ் எனப்படும் குளிர்பானங்கள் விற்பனையும் செய்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது உணவகங்களில் வேலைக்குச் சென்றால் நல்ல சம்பளம் கிடைக்கும் என்று உணவங்களில் சர்வராகவும் பணியாற்றியுள்ளார். நடிப்பதில் வாய்ப்பு கிடைத்த ஸ்ரீகாந்த் முதன்முதலில் சீரியல்களில் நடிக்கவே வாய்ப்பு கிடைத்தது. அதன்மூலம் அவருக்கு முதன்முதலில் கிடைத்த சம்பளம் 750 ரூபாய் ஆகும்.
மேலும், தன்னுடைய தொடக்க காலத்தில் இரு சக்கர வாகனம் கூட இல்லாத நிலையில் இருந்தவர் ஸ்ரீகாந்த். அதன்பின்பு, படிப்படியாக முன்னேறினார். அவரது மனைவி வந்தனாவிற்கும், அவருக்கும் இடையேயும் கருத்து வேறுபாடு பின்னர் சமரசம் ஆனார்கள். கடந்த பல வருடங்களாக அவருக்கு எந்த வெற்றிப்படமும் இல்லாவிட்டானாம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மாறி, மாறி நடித்து வருகிறார்.
இதற்கிடையில் வந்தனா என்ற பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொண்டு அவருடன் குடும்பம் நடத்திவிட்டு, அவரை மனைவியாக ஊரறிய ஏற்க மறுத்த நிலையில் அவர் பெரும் சட்ட போராட்டம் நடத்திய பிறகு அந்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டார் நடிகர் ஸ்ரீகாந்த்.
ரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில் போன்ற காதல் படங்களில் அசத்தியவர், பார்த்திபன் கனவு போன்ற குடும்ப பாங்கான படத்தில் நடித்தவர், மிகவும் சிரமப்பப்பட்டு இந்த இடத்திற்கு வந்த ஸ்ரீகாந்த் இவ்வாறு போதையின் பிடியில் சிக்கி தனது வாழ்வை சிதைத்துக் கொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு மேலும் நெருக்கடி தரும் விதமாக அவரது வீட்டில் இருந்து 3 பாக்கெட் கொகைனை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.





















