”நீ யாருயா அத சொல்ல?”ட்ரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் சைலண்ட் மோடில் இஸ்ரேல் Israel vs Iran Ceasefire
ட்ரம்ப் பேச்சை கேட்டு அமெரிக்காவின் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக, இஸ்ரேல் தற்போது வரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்று ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் முயற்சியால் ஈரான் - இஸ்ரேல் இடையேயான 12 நாள் மோதல் முடிவுக்கு வருவதாகவும், இருநாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும் அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே அதற்கு மறுப்பு தெரிவித்த, போர் நிறுத்தம் தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படவில்லை என ஈரன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி ஏற்படுமா? அல்லது தாக்குதல் சம்பவங்கள் மீண்டும் தொடருமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் மேற்கு ஆசிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் வெளியிறவு அமைச்சர் சையது அப்பாஸ் அரக்சி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஈரான் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளபடி: இஸ்ரேல் தான் ஈரான் மீது போரை நடத்தியது. இப்போதைக்கு, போர் நிறுத்தம் அல்லது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த "உடன்பாடும் " ஏற்படவில்லை. இருப்பினும், இஸ்ரேலிய ராணூவம் ஈரானிய மக்களுக்கு எதிரான அதன் சட்டவிரோத ஆக்கிரமிப்பை தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் நிறுத்தினால், அதன் பிறகு எங்கள் பதிலடியைத் தொடர எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை. ஆனால், அதுவரை எங்கள் ராணுவம் தீவிரமாக பதிலடி அளிக்கும் என விளக்கமளித்துள்ளார். இருநாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் அறிவித்த சிறிது நேரத்திலேயே ஈரான் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
போர் நிறுத்தம் தொடர்பான ட்ரம்பின் அறிவிப்பு தொடர்பாக கருத்து சொல்ல இஸ்ரேல் ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அல்லது அவரது அலுவலகம் சார்பிலும் கூட எந்தவித கருத்தும் பகிரப்படவில்லை. ஈரானின் மறுப்பும், இஸ்ரேலின் அமைதியும் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதா? என்பதை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சம்மந்தப்பட்ட நாடுகள் என்ன முடிவை எடுக்கப்போகின்றன என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.





















