IND vs ENG: அசால்டா அடிக்கும் இங்கி..! இந்திய பவுலிங் ஆகிடுச்சு சொங்கி - அப்போ அம்பேல்தானா?
IND vs ENG 1st Test: இந்திய அணிக்கு எதிராக 371 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் இங்கிலாந்து அணி லீட்ஸ் மைதானத்தில் எந்த சிரமுமின்றி இலக்கை நோக்கி ஆடி வருகின்றனர்.

IND vs ENG 1st Test: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் மோதி வருகின்றனர். இந்த போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி ஆடி வருகிறது.
விக்கெட் இழப்பின்றி வெளுக்கும் இங்கிலாந்து:
போட்டி தொடங்கி இன்று தேநீர் இடைவேளை வரை இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் கிராவ்லி - டக்கெட் இருவரும் நிதானமாக ஆடி வருகின்றனர். லீட்ஸ் மைதானத்தைப் பொறுத்தவரையில் சேசிங்கிற்கு மிகவும் உகந்த மைதானம் என்பதாலே பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
10 விக்கெட்டுகள் கையில்:
இன்னும் 300 ரன்களுக்கு குறைவான ரன்களே தேவைப்படும் நிலையில் 3 செசன்கள் கையில் இருக்கும் சூழலில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகளை கையில் வைத்துள்ளது. இந்திய அணிக்காக பும்ரா, சிராஜ், ஜடேஜா, பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்கூர் மாறி, மாறி வீசி வருகின்றனர். குறிப்பாக, பும்ரா - சிராஜ் இருவரும் மாறி, மாறி வேகப்பந்துவீச்சில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஆனால், கிராவ்லி - டக்கெட் ஜோடி நிதானமாக ஆடி வருகிறது. மைதானம் சேசிங்கிற்கு ஒத்துழைக்கும் என்பதால் இங்கிலாந்தின் கிராவ்லி - டக்கெட் ஜோடி மட்டுமின்றி முதல் இன்னிங்சில் அசத்திய ஒல்லி போப், ஹாரி ப்ரூக் மட்டுமின்றி ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித்தும் தங்களது பேட்டிங் திறமையை வெளிக்காட்ட காத்துள்ளனர்.
என்ன செய்யப்போகிறது இந்தியா?
இந்த வலுவான பேட்டிங்கை எதிர்த்து இந்திய பந்துவீச்சு என்ன செய்யப்போகிறது? என்ற கேள்வி இந்திய அணி முன் எழுந்துள்ளது. இந்த போட்டி தொடங்கியது முதலே மைதானம் பந்துவீச்சு சிரமமாகவே இருப்பதால், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினால் மட்டுமே இந்த போட்டியை இந்திய அணி தன்வசம் கொண்டு வர முடியும்.
பும்ராவிற்கு ஒத்துழைப்பு தருவது யார்?
இந்திய அணியில் பும்ரா மட்டுமே சவால் தரும் வகையில் பந்துவீசி வருகிறார். பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சை அவர்கள் எளிதாக எதிர்கொண்டு வருகின்றனர். சுழலும் மைதானத்தில் ஒத்துழைக்க மறுப்பதால் ஜடேஜாவின் சுழல் ஆதிக்கம் இந்த மைதானத்தில் எடுபடாது என்றே கூறலாம். இந்திய அணி முதல் இன்னிங்சில் ஏராளமான கேட்ச்களை தவறவிட்டது. அந்த தவறை இந்திய அணி இந்த இன்னிங்சிலும் செய்தால் போட்டி இங்கிலாந்து வசம் சென்று விடும்.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்களையும், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 465 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப்பண்ட் ஆகியோர் சதத்தின் உதவியால் 364 ரன்களையும் எடுத்தது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















