அம்மாடியோவ்.. சமஸ்கிருத வளர்ச்சிக்கு இத்தனை ஆயிரம் கோடியா; தமிழுக்கு எவ்ளோ? சாடிய முதல்வர் ஸ்டாலின்
இத்தனை ஆண்டுகளில் தமிழ் மொழிக்கு 113 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது சமஸ்கிருத மொழிக்கு ஓர் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டதை விடவும் மிகவும் குறைவு ஆகும்.

மத்திய அரசிடம் போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு என்று முதல்வர் ஸ்டாலின் சாடியுள்ளார்.
2014- 2025ஆம் ஆண்டு வரை சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்காக ரூ.2532.59 கோடி (ஆண்டுக்கு ரூ.230 கோடி) மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக ஆர்டிஐ தகவல் தெரிவித்துள்ளது. இது மற்ற மொழிகளுக்கு ஒதுக்கியதை விட 17 மடங்கு அதிகமாகும். இந்த வகையில் இத்தனை ஆண்டுகளில் தமிழ் மொழிக்கு 113 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது சமஸ்கிருத மொழிக்கு ஓர் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டதை விடவும் மிகவும் குறைவு ஆகும்.
Sanskrit gets the crores; Tamil and other South Indian languages get nothing but crocodile tears.
— M.K.Stalin (@mkstalin) June 24, 2025
போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு! https://t.co/sHftajapLt
இதற்கிடையே தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளுக்கு இரட்டை இலக்கத்திலேயே 10 ஆண்டுகளில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதைக் குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் கடுமையாகச் சாடி உள்ளார்.





















