அன்னையின் 145ம் ஆண்டு பிறந்த நாள் விழா - ஆரோவில் அரவிந்தர் ஆசிரமத்தில் பக்தர்கள் தரிசனம்
ஆரோவில் அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னையின் 145-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அன்னையின் அறை பக்தர்கள் தரிசனம்
புதுச்சேரி: ஆரோவில் அன்னையின் 145ம் ஆண்டு பிறந்த நாள் விழா ஆரோவில் நகரத்தின் 55ம் ஆண்டு தினத்தை யொட்டி பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆரோவில் அன்னையின் 145ம் ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் ஆரோவில் நகரத்தின் 55ம் ஆண்டு தினத்தையொட்டி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னையின் அறை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. பக்தர்களால் அன்புடன் அன்னை என்று அழைக்கப்படும் மிரா அல்பாசா 1878ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி, பாரீஸில், துருக்கி- எகிப்து யூத தம்பதியின் இரண்டாவது குழந்தையாக பிறந்தார்.1914ம் ஆண்டு புதுச்சேரியில் அரவிந்தரை சந்தித்து, ஆன்மீக பணியில் ஈடுபட்டார். அதைதொடர்ந்து புதுச்சேரியில் அரவிந்தர் ஆசிரமம் நிறுவி, 1968 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி ஆரோவில் சர்வதேச நகரத்தை உருவாக்க அடிக்கல் நாட்டி பணியை துவக்கினார்.
அன்னை வாழ்ந்த காலத்தில் அரவிந்தர் ஆசிரமத்தில் உள்ள தனது அறை அருகில் இருக்கும் பால்கனியில் நாள்தோறும் காலை 6 மணிக்கு நின்று, பக்தர்களை ஆசீர்வதித்து தனது நாளை துவங்குவது வழக்கம். இந்த நிலையில் இன்று 21ம் ஆம் தேதி அன்னையின் 145 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் ஆரோவில் நகரம் 55ம் ஆண்டு விழாவையொட்டி புதுச்சேரி ஒயிட் டவுன் மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில், முதலில் ஆசிரம வாசிகளின் சிறப்பு தியானம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து அன்னையின் அறை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்