மேலும் அறிய
Advertisement
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்... பொது உறுப்பினர் கூட்டத்தில் தீர்மானம் - அமைச்சர் பொன்முடி
தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினை நியமனம் செய்து, அவர் சிறப்பாக செயல்படுவார் என அமைச்சர் பொன்முடி தீர்மானம்
விழுப்புரம்: தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினை நியமனம் செய்து, அவர் சிறப்பாக செயல்படுவார் என விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி பேட்டியளித்தார்.
துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்
தமிழகத்தில் விளையாட்டு துறை வளர்ந்திருக்கிறது. அவர் விளையாட்டு துறை வளர்ச்சிக்கு எடுத்திருக்கிற பணி அளப்பறியது. கார்பந்தயம், செஸ் போட்டிகள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன. அடுத்த கார் போட்டியும் இங்கு நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது வரவேற்பதாக தெரிவித்தார். தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினை நியமனம் செய்து, அவர் சிறப்பாக செ,யல்படுவார்.
உயர்வுக்கு படி என்ற நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது. கல்விக்கு நிறை திட்டங்களை வகுத்து தமிழக முதலமைச்சர் செயல்படுத்தி வருவதாகவும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களும், பணிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு கல்வி பயில நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவில் ஒவ்வொரு தொகுதியிலும் கலைஞர் கருணாநிதியின் சிலை அமைக்க உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் சிலை அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கை திட்டங்களில் சிறப்பானதை தமிழகம் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் அதில் உள்ள சிலவற்றை தான் நாங்கள் ஏற்கவில்லை என தெரிவித்தார்.
உயர்கல்வி சிறப்பானதாக உள்ளது தமிழகத்தில் 75 சதவிகிதம் பொதுவானதாக இருக்க வேண்டும் என்பதை அறிவித்துள்ளதாகவும் தமிழகத்தை பொறுத்தவரை மாணவர்களின் வளர்ச்சிக்கேற்ப கல்வி திட்டம் வகுக்கபட்டுள்ளதாக கூறினார். மாணவர்கள் கஷ்டங்கள் எங்களுக்கு தெரியும் என்பதால் இரு மொழிக் கல்வியே போதும் என்று கூறி வருவதாகவும் வெளிநாட்டில் இருந்து கொண்டே முதல்வர் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளதாக தெரிவித்தார்.
விளையாட்டுப்போட்டிகள் துவக்கி வைப்பு
முன்னதாக, விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விளையாட்டுப்போட்டிகளாக, கையுந்துப்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து கபடி, ஹாக்கி, கோ-கோ, கால்பந்து, கேரம், செஸ், மேசைப்பந்து, இறகுப்பந்து, சிலம்பம், நீச்சல், கிரிக்கெட், தடகளம் போன்ற விளையாட்டுப்போட்டிகள் நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்ட பிரிவில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவ/மாணவிகளுக்கு 11.09.2024 முதல் 16.09.2024 வரையும் கல்லூரி மாணவ/மாணவிகளுக்கு 13.09.2024 முதல் 21.09.2024 வரையும், பொதுப்பிரிவினர் வீரர்/வீராங்கனைகள் 14.09.2024 முதல் 23.09.2024 வரையும் அரசு ஊழியர்களுக்கு 20.09.2024 அன்றும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 24.09.2024 அன்று நடைபெற உள்ளது.
மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் வெற்றிபெருவோர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியினால், தமிழ்நாட்டில், சர்வதேச அளவிலான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஒலிம்பியாட் செஸ் போட்டிகள், பார்முலா 4 கார் பந்தயம் போன்ற விளையாட்டுப்போட்டிகள் தமிழ்நாட்டில் முதன்முதலாக நடத்தப்பட்டுள்ளது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்டந்தோறும் சென்று விளையாட்டுப்போட்டிகளை நடத்துவதுடன், மாணவ, மாணவியர்கள் மற்றும் வீரர், வீராங்கனைகளுக்கு தன்னம்பிக்கையினையும் ஏற்படுத்திக்கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில், அனைத்து ஊராட்சிகளிலும் ஒரு விளையாட்டு மைதானம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். தற்பொழுது அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டு மைதானம் அமைத்துக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விளையாட்டுப்போட்டிகளில் சிறந்து விளங்கும் வகையில் மாணவ, மாணவியர்கள், வீரர், வீராங்கனைகளுக்கு தேவையான நிதியுதவியினை வழங்கி, தங்களுடைய விளையாட்டுத்திறனை மேம்படுத்திக்கொள்ள வழிவகை அமைத்துக்கொடுத்துள்ளார்கள். அந்த வகையில், தற்பொழுது நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டிலிருந்து 04 வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமைத் தேடிக்தந்துள்ளனர்.
மாணவ, மாணவியர்கள் கல்வியனைப்போலவே, விளையாட்டுப்போட்களிலும் பெருமளவில் பங்கேற்றிட வேண்டும். விளையாடுவதால் மனம் ஒருநிலை படுவதால் கல்வியிலும் நன்கு கவனம் செலுத்திட முடியும். இதுமட்டுமல்லாமல், விளையாட்டுப்போட்டிகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் வெற்றிபெறுவோர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் வழங்கப்படும். எனவே, முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்பதற்கான வருகைபுரிந்துள்ள அனைவரும் தங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி விளையாட்டில் வெற்றிபெற வேண்டும் என்று மனமாற வாழ்த்துவதுடன், விளையாட்டுப்போட்டிகளில் வெற்றிபெற்று நம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
கிரிக்கெட்
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion