Vellore DMK Issue | ”நாளைக்கு நீ கடைபோட மாட்ட” திமுகவினர் அட்ராசிட்டி? நிகழ்ச்சியில் நடந்த சண்டை
பொது கூட்டம் நடப்பது குறித்து எங்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் கொடுக்காமல் கடைகளை திடீரென அகற்றசொல்லி திமுகவினர் மிரட்டியதாக கடையின் உருமையாளர் பரபரப்பு குற்றசாட்டியுள்ளனர். இப்ப கடையை எடுக்கல நாளையில் இருந்து நீ இங்க கடை போட மாட்ட, எடுங்கயா கடையா என திமுகவினர் மிரட்டியதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கடந்த 25-ம் தேதி வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே திமுகவின் மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. பொது கூட்டம் நடைபெறும் இடத்தில் வேலூரின் பிரபலமான உணவு வகையான முட்டை சேமியா சாலையோர கடைகள் உள்ளது. இந்நிலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது திடீரென வந்த திமுக நிர்வாகிகள் சிலர் முட்டை சேமியா போடுவதை நிறுத்தும்படியும், கடையை அங்கிருந்து தள்ளிபோடும் படியும் கூறியுள்ளனர். முன்னறிவிப்பு இன்றி எங்களால் கடையை எடுக்க முடியாது என கடையை காரர் கூற அதற்கு ஆந்திரமடைந்த நிர்வாகிகள் "நாளையில் இருந்து கடைபோட மாட்ட" என மிரட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது குறித்து திமுக தரப்பில் கேட்ட போது, அன்றைய தினம் தியாகிகள் வீர வணக்க பொது கூட்டத்துக்கு மக்கள் ஏராளமானோர் வந்து அமர்ந்திருந்தார்கள். மேலும் மேடையில் சிறப்பு அழைப்பாளர் பேசும் போது முட்டை சேமியா கடையில் தவாவை தட்டும் சத்தமும், மசாலா நெடியும் தொடர்ந்து வந்ததால் மேடையில் பேச முடியவில்லை மக்கள் மசாலா நெடியால் அவதிபட்டார்கள். இதனால் கூட்டத்தை தொடர முடியவில்லை. இதனால் முதலில் 2 முறை கடைகாரர்களிடம் கொஞ்ச நேரம் நிறுத்தும் படியும் அல்லது கொஞ்ச தூரம் தள்ளி போகும்படியும் சொன்னோம். ஆனால் அவர்கள் எங்களோடு வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்கள். மற்றபடி அவர்கள் குற்றம் சாட்டும்படி எதுவும் நடக்கவில்லை என கூறினர். பொது கூட்டம் நடப்பதால் கொஞ்ச நேரம் அமைதியாக இருக்கும்படியும் அல்லது கடையை சற்று தள்ளி வைக்க சொன்னோமே தவிர தவறாக கூறவில்லை. உண்மைக்கு புறம்பாக பொய் பரப்புவதாக திமுக தரப்பு விளக்கம் அளித்துள்ளது.





















