திமுக கொடி பொருத்திய கார் பறிமுதல்.! சூடுபிடிக்கும் ஈசிஆரில் பெண்களை துரத்திய விவகாரம்
Chennai ECR Road Car Chase Issue: சென்னை ஈசிஆர்_ல், பெண்கள் சென்ற காரை, திமுக கொடி பொருத்திய காரில் இருந்த இளைஞர்கள், துரத்திய விவகாரத்தில் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சென்னை ஈசிஆர் சாலையில், திமுக கொடியுடன் இருந்த காரில் இருந்த இளைஞர்கள், பெண்கள் சென்ற காரை துரத்திய விவகாரத்தில், சம்பந்தப்பட்ட 2 கார்கள் பற்முதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கொடி பொருத்திய காரை, கிழக்கு தாம்பரத்தில் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த காரை சந்துரு என்பவர் பயன்படுத்தி வந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சந்துரு வீட்டில் இல்லாத காரணத்தால் , உறவினர்களிடன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மற்றொரு காரில் இருந்த இளைஞர்களையும், காரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் , சென்னை தனியார் கல்லூரி மாணவர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஈசிஆர் சாலையில் பெண்களை துரத்திய கார்
கடந்த ஜனவரி 25ஆம் தேதி நள்ளிரவில், சென்னை ஈசிஆர் சாலையில், காரில் சென்ற பெண்களை, திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர் வழிமறித்து மிரட்டுவது போன்ற, வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண்கள் பயணித்த கார் மற்றொரு காருடன் மோதியதால் அந்த சொகுசு காரில் இருந்தவர்கள் இந்த காரை துரத்தி நியாயம் கேட்டுள்ளனர். ரிவர்ஸ் எடுக்கும்போது கார் மோதி உள்ளது. பின்னர், இரு தரப்பினரும் சமாதானம் ஆகியதாகவும், இதையடுத்து, அடுத்த நாள் கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சிஎஸ்ஆர் வழங்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தற்போது, இந்த வீடியோ வெளியாகியுள்ள நிலையில் பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் இது தொடர்பாக விசாரித்து வருகிறார். வழியில் மிரட்டிய இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் கண்டனம்:
இந்த சம்பவத்தையடுத்து, பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், தற்போது திமுக கொடி பொருத்திய காரை, கிழக்கு தாம்பரத்தில் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த காரை சந்துரு என்பவர் பயன்படுத்தி வந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சந்துரு வீட்டில் இல்லாத காரணத்தால் , உறவினர்களிடன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மற்றொரு காரில் இருந்த இளைஞர்களையும், காரையும் காவல்துறையினர் தேடி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

