டெல்லி குளிரால் 476 உயிரிழப்பு: தலைமைச் செயலாளர், காவல் ஆணையருக்கு நோட்டீஸ்
Delhi Winter Death: இந்திய தலைநகர் டெல்லியில் குளிர் காலத்தில் 474 பேர் இறந்துள்ளதாக வெளியான தகவலையடுத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

474 பேர் உயிரிழப்பு:
டெல்லியில் குளிர்காலத்தில் 56 நாட்களுக்குள் வீடற்ற 474 பேர் இறந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழுமையான வளர்ச்சிக்கான மையம் (CHD) தன்னார்வத் தொண்டு நிறுவனமான அளித்த தகவலின்படி, டெல்லியில் இந்த குளிர்காலத்தில், அதாவது 56 நாட்களுக்குள் சுமார் 474 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டு விசாரிக்கிறது.
டெல்லியில் இந்த உயிரிழப்புகள் 2024 டிசம்பர் 15 முதல் 2025 ஜனவரி 10 வரை நிகழ்ந்துள்ளன. கம்பளி ஆடைகள், போர்வைகள், போதுமான தங்குமிடங்கள் போன்ற அத்தியாவசிய பாதுகாப்பு உதவிகள் கிடைக்காததால், இந்த உயிர்ழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
வீடற்றவர்கள் பாதிப்பு:
முழுமையான வளர்ச்சிக்கான மையம் (CHD) தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தகவலின்படி, தில்லியில் அடையாளம் காணப்படாத சடலங்களில் சுமார் 80 சதவீதம் பேர் வீடற்றவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த செய்தி அறிக்கையின் உள்ளடக்கங்கள், உண்மையாக இருந்தால், இது கடுமையான மனித உரிமை மீறலாக இருக்கும் என்று ஆணையம் கருத்துத் தெரிவித்துள்ளது.
2025 ஜனவரி 16 அன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின்படி, தேசியத் தலைநகரில் உள்ள பல தங்குமிடங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிலையில் இல்லை. வெப்பமூட்டி, வெந்நீர் போன்ற அத்தியாவசிய வசதிகள் இல்லாததால், தனிநபர்கள் கடுமையான குளிருக்கு ஆளாகின்றனர்.
Also Read: யோகிக்கு 3 முறை கால் செய்த மோடி.! மகா கும்பமேளாவில் 30பேர் உயிரிழப்பு: ரூ.25 நிவாரணம் அறிவிப்பு
நோட்டீஸ்:
தெருக்களில் வசிக்கும் மக்களில் குறிப்பிட்ட சிலரை மேற்கோள் காட்டி, சுவாச நோய்த்தொற்றுகள், தோல் நோய்கள், மன அழுத்தம் உள்ளிட்ட பல பாதிப்புகளை அவர்கள் எதிர்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, இந்த விவகாரம் குறித்து ஒரு வாரத்திற்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு தலைமைச் செயலாளர் மற்றும் தில்லி காவல் துறை ஆணையருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

