மேலும் அறிய

Diwali 2023: விழுப்புரத்தில் விறகு அடுப்பில் தின்பண்டங்கள் தயாரிக்கும் குடும்பப் பெண்கள்

Diwali 2023: விழுப்புரத்தில் விறகு அடுப்பில் தின்பண்டங்கள் தயாரிக்கும் பெண்கள் - வெளி மாநிலங்களில் இருந்து குவியும் ஆடர்கள்.

தீபாவளி பண்டிகை 

இந்துக்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று தான் தீபாவளி. தீபாவளி என்றாலே எண்ணெய் குளியல், இனிப்பு வகைகள், ஸ்வீட்ஸ், பட்டாசு தான் பொதுமக்களுக்கு ஞாபகம் வரும். புத்தாடை உடுத்தியும், இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் மக்கள் உற்சாகமாக கொண்டாடும் பண்டிகை தான் தீபாவளி. இந்த மாதம் தீபாவளி நவம்பர் 12ஆம் தேதி வருவதால் அனைத்து பகுதிகளிலும் இனிப்பு வகைகள் செய்ய ஆரம்பித்துள்ளனர் கடை உரிமையாளர். முதலவதாக  இனிப்பு வகைகளில் ஒன்றான லட்டுவை செய்து தீபாவளி இனிப்பு வகைகளை செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் இவை அனைத்தும் விறகு அடுப்பில் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.

Diwali 2023: விழுப்புரத்தில் விறகு அடுப்பில்  தின்பண்டங்கள் தயாரிக்கும் குடும்பப் பெண்கள்

விறகு அடுப்பில் தயாரிக்கப்படும் சுவிட்ஸ் 

விழுப்புரம் ( Villupuram ) பாணாம்பட்டு  சாலையில் அமைந்துள்ளது RK ஸ்நாக்ஸ் கடை. இக்கடை 18 வருடங்களாக இயங்கி வருகிறது. இக்கடையில் வீட்டு முறைப்படி இனிப்பு வகைகள் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விழுப்புரம் அடுத்த பாணாம்பட்டு சாலையில் அமைந்துள்ளது ஆர் கே ஸ்னாக்ஸ். இக்கடை 19 வருடங்களாக இயங்கி வருகிறது. இக்கடையின் உரிமையாளர் கலா (47) ஆவார். இக்கடையில் வீட்டு முறைப்படி அதிரசம், லட்டு, பாதுஷா, எள்ளடை, புதினா எள் அடை, முறுக்கு, கார முறுக்கு பூண்டு முறுக்கு அதிரசம் சோமாஸ் ரவா லட்டு போன்ற தின்பண்டங்கள் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Diwali 2023: விழுப்புரத்தில் விறகு அடுப்பில்  தின்பண்டங்கள் தயாரிக்கும் குடும்பப் பெண்கள்

இங்கு பணிபுரியும் பணியாளர்கள் அனைவருமே திருமணமான பெண்கள். திருமணத்திற்கு பிறகு பெண்கள் சிலர் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இந்த பெண்களின் சுய தொழில் நடத்தி வருவது உணர்த்துகிறது. பெண்களால் முடியாதது உலகத்தில் எதுவும் இல்லை என்ற நோக்கில் இப்பெண்கள் தங்களுக்கு தெரிந்த வேலைகளில் ஈடுபட்டு அதனை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றனர். அதில், ஒன்றாக வீடுகளில் தின்பண்டங்களை தயாரிக்கும் பணியில் இப்பெண்கள் குழு ஈடுபட்டு வருகின்றனர்.

Diwali 2023: விழுப்புரத்தில் விறகு அடுப்பில்  தின்பண்டங்கள் தயாரிக்கும் குடும்பப் பெண்கள்

இக்குழுவில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விழுப்புரம் சுற்றுப்பகுதியில் வசித்து வருபவர்கள். இங்கு பணிபுரியும் பெண்களுக்கு ஒரு நாளைக்கு அவரவர்கள் வேலையைப் பொறுத்து 500 ரூபாய்க்கு உள்ள ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.15,000 வரை வருமானம் வருகிறது. ஒரு நாளில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் கார வகைகள் அன்றே விற்பனை ஆகிவிடும். இங்கு தயாரிக்கப்படும் பொருட்களின் விலை ஒரு பாக்கெட் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலை 8 மணிக்கு வேலை தொடங்கப்பட்டு இரவு 9:30 மணி வரை நடைபெறும். தின்பண்டங்கள் தயாரிப்பது மட்டுமல்லாமல் சிறிய உணவகத்தை நடத்தி வருகிறார்கள். இவர்கள் தயாரிக்கும் உணவு மற்றும் தின்பண்டங்களின் சுவையின்காரணமாக கடைக்கு அதிக அளவில் மக்கள் வருகின்றனர்.

Diwali 2023: விழுப்புரத்தில் விறகு அடுப்பில்  தின்பண்டங்கள் தயாரிக்கும் குடும்பப் பெண்கள்

தீபாவளி ஸ்பெஷல் :

இக்கடையில் வீட்டு முறைப்படி அதிரசம், லட்டு, பாதுஷா, எள்ளடை, புதினா எள் அடை, முறுக்கு, கார முறுக்கு பூண்டு முறுக்கு அதிரசம் சோமாஸ் ரவா லட்டு போன்ற தின்பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஆடர் குவிந்து வருகின்றன, மேலும் இவை அனைத்து வீட்டு முறையில் செய்வதால் போதுமக்களிடேயை வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Diwali 2023: விழுப்புரத்தில் விறகு அடுப்பில்  தின்பண்டங்கள் தயாரிக்கும் குடும்பப் பெண்கள்

கடை உரிமையாளர் கலா கூறியதாவது :-

என்னுடைய தந்தை வீடுகளிலேயே தின்பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்து வந்தார். அதை நான் சிறு வயதிலேயே பார்த்து, கற்றுக்கொண்டேன்.  தந்தைக்கு  உடல் நலம் சரியில்லாமல் போனது. இதன் காரணமாக நாங்கள் இனிப்பு வகைகளை தயாரிக்கும் தொழிலை கைவிட்டு விட்டோம். அதன்பின் எனக்கு திருமணமானது. திருமணமாகி 5-வது வருடத்தில் கணவனை இழந்துவிட்டேன். எங்களிடம்  இனிப்பு வகைகளைப் பெற்றுக்கொண்ட வாடிக்கையாளர்கள்,  கடைக்கு வந்து நீங்கள் மறுபடியும் இனிப்பு வகைகளை செய்ய ஆரம்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.  எனக்கும் குடும்பத்தை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. அதன்பின் வீட்டிலேயே சிறியதாக செய்ய ஆரம்பித்தேன்.

Diwali 2023: விழுப்புரத்தில் விறகு அடுப்பில்  தின்பண்டங்கள் தயாரிக்கும் குடும்பப் பெண்கள்

நானும் எனக்கு உதவியாக இன்னொரு பெண்ணையும் வைத்து வேலை செய்ய ஆரம்பித்தேன். நான் தயாரித்த இனிப்பு வகையின் சுவை பிடித்து இருந்த காரணத்தினால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூட ஆரம்பித்தது. தற்போது என்னிடம் 10க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்து வருகிறார்கள். அனைவரும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த திருமணமான பெண்கள் ஆகும். இவர்களை வைத்து தற்போது வெற்றிகரமாக 19 வருடங்களாக இந்த கடையை நான் நடத்தி வருகிறேன். திருமணமான பெண்களாலும் நிச்சயமாக சாதிக்க முடியும் என்பதற்கு நாங்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருப்போம் என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
TVK Vijay:
TVK Vijay: "பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி" பதிலடி தருவாரா விஜய்?
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
TVK Vijay:
TVK Vijay: "பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி" பதிலடி தருவாரா விஜய்?
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?
Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Embed widget