சினிமாவில் நடிப்பதால் மட்டும் சூப்பர் ஹீரோ கிடையாது - நடிகை குஷ்பூ
சராசரி மனிதர்கள்தான் அவர்களுக்கும் போதை பழக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதை எப்படி தடுக்க வேண்டும் என்ற வழியை பார்க்க வேண்டும் - குஷ்பூ

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பு ;
லாக் அப் உயிரிழப்புகள் தமிழ்நாட்டில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சட்டம்- ஒழுங்கு எந்தளவு சீர்குலைவு ஆகி வருகிறது என்பதை பார்க்க வேண்டும். பொது மக்களுக்கு போலீசார் தரும் தொந்தரவுகளை முதலமைச்சர் நேரடியாக பார்க்க வேண்டும்.
சட்டம்- ஒழுங்கு முதலமைச்சர் கீழ் தான் வரும். சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டு உள்ளது. ஆனால் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. ஏன் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது. இது திமுக அரசின் தோல்வியை தான் காட்டுகிறது. இதற்கு முதலமைச்சர்தான் பொறுப்பு ஏற்று பதில் சொல்ல வேண்டும்.
வரதட்சனை வாங்குவது மட்டுமில்ல , கொடுப்பதும் குற்றம்
தமிழ்நாட்டில் லாக் அப் மரணங்கள் மட்டுமில்லாமல், வரதட்சணை கொடுமையால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்ற சம்பவங்களை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது. வரதட்சணை வாங்குவது மட்டுமல்ல கொடுப்பதும் தவறு தான். பெண் குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் என்றால் வரதட்சனை கொடுக்க வேண்டாம். வரதட்சணை வாங்கவில்லை என்றாலும் ஆசையாக பொருட்கள் தர வேண்டாம் என பெற்றோர்களுக்கு கூறுகிறேன்.
முற்று புள்ளி வைக்க வேண்டும்
பெண்ணிற்கு என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்டால் அவர்களுக்கு பெண்ணை கட்டி தராதீர்கள். 2 பெண் குழந்தைகளின் தாயாக சொல்கிறேன் எப்போதும் என்னுடைய குழந்தைகளாக இருப்பார்கள். அதன் பிறகு தான் கணவருக்கு மனைவி. ஒரு பிரச்சனை என்றால் வாய் திறந்து பேசுங்கள். லாக் அப் உயிரிழப்பு , வரதட்சணை கொடுமை போன்றவற்றிக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
சட்டம் - ஒழுங்கு பிரச்சனையில் முதலமைச்சர் என்ன செய்து கொண்டு இருக்கிறார். போதை பொருள் விவகாரத்தை சினிமா துறையில் மட்டும் கூற முடியாது. பள்ளி , கல்லூரி உள்பட எல்லா இடத்திலும் போதை பொருள் நடமாட்டம் இருக்கிறது. சினிமாவில் 2 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதால் உடனே அதிகமாகி விட்டது என்பதா ? எத்தனை பேர் கைதாகி உள்ளனர்.
சினிமாவில் நடித்தால் மட்டும் சூப்பர் ஹீரோ இல்லை
சினிமாவில் நடிப்பதால் சூப்பர் ஹீரோ கிடையாது. சராசரி மனிதர்கள்தான் அவர்களுக்கும் போதை பழக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதை எப்படி தடுக்க வேண்டும் என்ற வழியை பார்க்க வேண்டும். ஆனால் பிரச்சனைகளை தீர்க்க வழி பார்க்காமல் பூதக் கண்ணாடி வைத்து பெரிசாக்க கூடாது. கொக்கைன், கஞ்சா மட்டும் கிடையாது ஊசி முலமும் போதை உட்கொள்ளும் நிலை இருக்கிறது. போதைக்கு அடிமையானவரை எப்படி மீட்பது என்ற வழியை பார்க்க வேண்டும். ஏற்கெனவே போதை பொருள் விவகாரத்தில் திமுக பின் வாங்கியது. சினிமாவை மட்டும் சொல்ல கூடாது





















