மேலும் அறிய
ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்ற கார் தீ விபத்தில் சிக்கியது; சென்னையை சேர்ந்த 4 பேரின் கதி என்ன?
ஏலகிரி மலைக்கு சுற்றுல்லா சென்ற கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு! அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 4 மென்பொறியாளர்கள்

தீ விபத்தில் சிக்கிய கார்
Source : Whatsapp
ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்ற கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் மென்பொறியாளர்கள் நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள்.
சென்னையை சேர்ந்த மென்பொறியாளர்கள் 4 பேர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலைக்கு சுற்றுல்லா செல்வதற்காக காரில் வந்து கொண்டிருந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உடையராஜபாளையம் பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது, தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதாமல் இருக்க கார் ஓட்டுநர் காரை திருப்பிய போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பற்றியுள்ளது.

உடனடியாக காரில் இருந்த 1 பெண், 3 ஆண்கள் சிறு காயங்களுடன் உயிர்தப்பி காரில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் இவ்விபத்து குறித்து நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், மற்றும் அப்பகுதி மக்கள் ஆம்பூர் தீயணைப்புத்துறையினர் மற்றும் ஆம்பூர் கிராமிய காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் தீயணைப்புத்துறையினர் காரில் பற்றிய தீயை அணைத்தனர்.
அதனை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion