மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Trichy: முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாக ரூ.26½ லட்சம் மோசடி - திருச்சியில் ஒருவர் கைது
பணத்தை கொடுத்தால் இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி ரூ.26½ லட்சம் முதலீடு பெற்று மோசடி செய்தாக யு.கே.ஆர். புரமோட்டர்ஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
![Trichy: முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாக ரூ.26½ லட்சம் மோசடி - திருச்சியில் ஒருவர் கைது Trichy : Scam of Rs 26½ lakh claiming double profit on investment TNN Trichy: முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாக ரூ.26½ லட்சம் மோசடி - திருச்சியில் ஒருவர் கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/24/78b8aa81564400d377e75993b5b789a71687603613009184_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாக மோசடி
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பலவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக ஆன்லைன் மோசடி, சீட் மோசடி, பணத்தை முதலீடு செய்தால் பலமடங்கு அதிகமாக தருவதாக கூறி மக்களின் மனதில் ஆசையை வளர்த்து பணத்தை கொள்ளையடித்து செல்வது என சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு, காவல்துறையினர் பல்வேறு விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி, சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றில் விழிப்புணர்வு செய்து வருகிறார்கள். ஆனால் பொதுமக்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பதே மோசடிகள் அதிகரிக்க காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் திருச்சி கருமண்டபம் ஜெய்நகர் விரிவாக்க பகுதியை சேர்ந்தவர் டேனியல் லெனின் குமார் (வயது 23). புரோக்கர் ஜேம்ஸ் என்பவர் மூலம் திருச்சி தபால் நிலையம் அருகே செயல்பட்டு வரும் யு.கே.ஆர். புரமோட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் ரஞ்சித்குமார் (48) டேனியல் லெனின் குமாருக்கு அறிமுகம் ஆனார். கடந்த 2020-ம் ஆண்டு டேனியல் லெனின் குமாரை தொடர்பு கொண்ட ரஞ்சித்குமார், எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது. இதை நம்பிய அவர், கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை ரூ.26½ லட்சத்தை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.
![Trichy: முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாக ரூ.26½ லட்சம் மோசடி - திருச்சியில் ஒருவர் கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/24/7f4a3c0ebbcbfd5250a6884dd2b5a75d1687603674247184_original.jpg)
இதனை தொடர்ந்து, ரஞ்சித்குமார், இதுவரை அவருக்கு லாபத்தொகையையும் கொடுக்கவில்லை. முதலீடு செய்த பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதுபற்றி பலமுறை கேட்டும் அவர் உரிய பதில் அளிக்கவில்லை. ரஞ்சித்குமார் ரூ.26½ லட்சத்தை மோசடி செய்தது அப்போது தான் இவருக்கு தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ரஞ்சித்குமார், அதற்கு உடந்தையாக இருந்த புரோக்கர் ஜேம்ஸ் ஆகிய 2 பேர் மீதும் திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து ரஞ்சித்குமாரை கைது செய்த போலீசார், ஜேம்சை தேடி வருகிறார்கள். மேலும் இதுக்குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்.. பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது அனைவரின் ஆசை தான், ஆனால் உடனடியாக பணத்தை இரட்டிப்பாக மாற்றி கோடிஸ்வரனாக ஆகலாம் என பலரும் எண்ணுகிறார்கள், அது முற்றிலும் தவறு என்றார். இனிமேல் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஆகையால் வருங்காங்களில் பணத்தை இரட்டிபாக தருகிறோம், நிறுவனங்கள், நிலங்கள் மீது முதலீடு செய்யுங்கள் என ஆசை வார்த்தை யாரு கூறினாலும், அதை தயவு செய்து நம்பி ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/ abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion