மேலும் அறிய

ஆடிபெருக்கு திருவிழா: திருச்சி காவிரி கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்; பூஜை செய்து தாலி மாற்றிக்கொண்ட புது ஜோடிகள்!

ஆடி பெருக்கு பண்டிகையை திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொண்டாடினர்.

காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18 ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. காவிரி வரும் ஒகேனக்கல் முதல் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை காவிரி கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். 

இதனை தொடர்ந்து  திருச்சியில் அம்மா மண்டபம், கருடமண்டபம், கீதாபுரம், ஓடத்துறை, அய்யாளம்மன் படித்துறை உள்ளிட்ட படித்துறைகளில் ஆடிப்பெருக்குவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆடிபெருக்கு திருவிழா: திருச்சி காவிரி கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்; பூஜை செய்து தாலி மாற்றிக்கொண்ட புது ஜோடிகள்!

திருச்சியில் ஆடிபெருக்கு திருவிழா கொண்டாட்டம்

குறிப்பாக அம்மாமண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட பக்தர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

மேலும் படித்துறையில் வாழை இலை விரித்து அதில் மஞ்சள் பிள்ளையார் வைத்து, தேங்காய், அரிசி, வெல்லம், பழ வகைகள் உள்பட மங்கல பொருட்களை படையலிட்டு பூஜை செய்து வருகிறார்கள்.

பின்னர் காவிரி ஆற்றுக்கு தீபாராதனை காட்டி வழிபடுவர். சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக்கொள்வர். மேலும் திருமணமாகாத இளம்பெண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டி கையில் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டனர்.

மேலும் கணவருக்கு நீண்ட ஆயுளும், நீடித்த செல்வமும் வழங்க வேண்டும் என்று சுமங்கலி பெண்கள் அனைவரும் காவிரித்தாயை பிரார்த்தித்து, தங்களது தாலியை பிரித்து புதுத்தாலியை கட்டுவர்.இளைய பெண்களுக்கும் கட்டிவிடுவர்.

தமிழர்கள் பாரம்பரியமாக கொண்டாடும் ஆடிப்பெருக்கு விழா, காவிரியாற்று வெள்ளம் போலவே, காவிரி கரையோர மக்களிடம் மகிழ்ச்சியை கரை புரண்டோட வைத்துள்ளது.

இதுபோல், ஆடிப்பெருக்கான இன்று, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, குடமுருட்டி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் படித்துறை உள்ளிட்ட, காவிரி படித்துறைகளில் பொதுமக்கள் ஏராளமாக கூடியுள்ளனர்.

ஆடிபெருக்கு திருவிழா: திருச்சி காவிரி கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்; பூஜை செய்து தாலி மாற்றிக்கொண்ட புது ஜோடிகள்!

தடையை மீறி ஆற்றில் குளிக்க தடை - ஆட்சியர் பிரதீப்குமார்

மேலும் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு வெள்ள அபயா எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. 

தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதால் பொதுமக்கள் கரையோரங்களில் சென்று குளிக்கவோ, துணி துவைக்கவோ மற்றும் புகைப்படங்கள் எடுப்பது ,ரீல்ஸ் வீடியோ எடுப்பது போன்ற எந்த விதமான தவறான செயலிலும் ஈடுபடக் கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மாவட்ட நிர்வாகம் சார்பாக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும். 

ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் கொண்டாடுவதற்கு ஏதுவான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் தயார் செய்துள்ளது. 

காவிரி கரைகள் ஓரம் தடுப்புகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் ஆற்றின் உள்ளே செல்லாதவாறு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஆடிப்பெருக்கு திருவிழாவை கொண்டாட வரும் மக்கள் காவல்துறை அறிவுரைப்படி ஆற்றில் சில இடங்களில் மட்டுமே குளிக்க வேண்டும்.  தடையை மீறி வேற எங்கேயாவது பொதுமக்கள் ஆற்றுக்கரையோரம் இறங்கினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget