மேலும் அறிய
மதுரையில் த.வெ.க., மாநாடு... பூமி பூஜையில் கலந்து கொண்ட புஸ்ஸி ஆனந்த் !
தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் யாகசாலை பூஜை கலந்து கொண்டனர்.

பூமி பூஜை நிகழ்ச்சியில்
Source : whats app
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள, பாரப்பத்தி எனும் இடத்தில் நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
மதுரையில் நடைபெறும் த.வெ.க., மாநில மாநாடு
மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி கிராமம் அருகே சுமார் 200 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, கடந்த இரண்டு நாட்களாக சுத்தம் செய்யப்பட்டு வந்தது. மேலும் பூமி பூஜைக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகவல் கசிந்தால் கூட்டம் அதிகமாகிவிடும் என்பதால் மறைமுகமாக இந்த பூமி பூஜைக்கான பணிகளானது நடைபெற்றது. பூமி பூஜையை தொடர்ந்து மதுரை போலீஸ் எஸ்.பி.,யை நேரில் சந்தித்து அனுமதி பெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அல்லது நீதிமன்றம் சென்றாவது திட்டமிட்டபடி மாநாடானது நடைபெறும் என கூறப்படுகிறது.
த.வெ.க., மாநாட்டிற்கு பூமி பூஜை
மாநாடு ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெற உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. மேலும் இம் மாநாட்டில் முதல் கட்டமாக 120 வேட்பாளர்களை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மதுரை பாரப்பத்தி தவெக இரண்டாவது மாநில மாநாடு பூமி பூஜை- இந்து, கிறிஸ்டின், முஸ்லிம் ஆகிய படங்களை வைத்து பூஜை நடைபெற்றது. இதில் தவெக பொது செயலாளர் ஆனந்த் தலைமையில் கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் யாகசாலை பூஜை கலந்து கொண்டனர். மதுரை பாரபத்தி கிராமம் அருகே 200 ஏக்கர் பரப்பளவில் நிலம் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2 நாட்களாக சுத்தம் செய்து பணியில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது.
தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழக அரசியல் பரபரப்பு ஏற்பட்டு வரும் நிலையில் மதுரையில் த.வெ.க., மாநில மாநாடு நிகழ்ச்சி, முக்கியதுவம் பெரும் என சொல்லப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















