கீழடி ஆய்வறிக்கை ஒன்றிய அரசு இதை தான் செய்யப் போகிறது... சு.வெங்கடேசன் சுட்டிக் காட்டுவது என்ன?
தமிழர்களின் உண்மைக்கு எதிராகவும், வரலாற்றுக்கு எதிராகவும், தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராகாவும் பாஜக எடுக்கின்ற ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தமிழ் சமூகம் பதிலடி கொடுக்கும் - மதுரை எம்.பி காட்டம்.

கீழடியில் பெயரளவில் ஆய்வு மேற்கொண்டு, ஶ்ரீ ராமனை அழைத்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பது ஒன்றிய அரசின் திட்டமிட்ட செயல் - மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேட்டி
மதுரை எம்.பி சு.வெங்கடேசன் செய்தியாளர்கள் சந்திப்பு
மதுரையில் தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்...,"கீழடியில் 102 குழிதோண்டி, 88 கார்பன் மாதிரிகளையும், 5700 தொல் பொருட்களையும் கொண்டு அறிவியல் முறை பகுப்பாய்வு நடத்தப்பட்டுள்ளது. இவ்வளவு ஆய்வுகள் நடத்தி ஆய்வு அறிக்கை சமர்பித்தால் அதை ஆதாரம் போதியதாகவில்லை என்று இந்திய தொல்லியல் துறையினர் சொல்கிறார்கள்.
வைகை நாகரீகைத்தையும் நிராகரிக்கும் அப்படமான சான்று
”ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே வருடத்தில் 10 குழியை தோண்டி சரஸ்வதி நதியை கண்டுபிடித்துவிட்டார்கள்” - என்று சொல்வது வேதனையாக உள்ளது. கீழடி அகழாய்வை மேற்கொண்டவர் சமர்பித்த ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்வில்லை. கீழடியில் ஒன்றும் கிடைக்கவில்லை என, எழுத்துப்பூர்வமாக கொடுத்த ஶ்ரீ ராமனை அழைத்து, ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்., என்று ஒன்றிய அரசு சொல்வது தமிழர் நாகரிகத்தையும், வைகை நாகரீகைத்தையும் நிராகரிக்கும் அப்படமான சான்று.
பாஜக எடுக்கின்ற ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தமிழ் சமூகம் பதிலடி கொடுக்கும்
கீழடியில் பெயரளவில் ஆய்வு மேற்கொண்ட ஶ்ரீ ராமனை அழைத்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பது ஒன்றிய அரசின் திட்டமிட்ட செயல். கீழடியில் ஒன்றுமில்லை என்று தான் ஶ்ரீ ராமன் ஆய்வறிக்கை சமர்பிப்பார். தமிழர்களின் உண்மைக்கு எதிராகவும், வரலாற்றுக்கு எதிராகவும், தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராகாவும் பாஜக எடுக்கின்ற ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தமிழ் சமூகம் பதிலடி கொடுக்கும்" என்றார்.





















