திருவண்ணாமலையில் மாபெரும் புத்தகத் திருவிழா; அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைப்பு
திருவண்ணாமலையில் புத்தக திருவிழாவில் புத்தகம் படிப்பதன் மூலம் தங்கள் திறனை வளர்த்து கொள்ளவும், மன அழுத்ததை குறைக்கவும், ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
திருவண்ணாமலை காந்தி நகரில் மாபெரும் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து ஆயிரத்து இருநூற்று எழுபத்தி எட்டு பயனாளிகளுக்கு ரூ 4 கோடியே 17 இலட்சத்து மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியினை துவக்கி வைத்தார். உடன் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டனர்.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:
தமிழக அரசின் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. பப்பாசி சார்பில் தமிழ்நாட்டின் தலைநகரில் மட்டும் புத்தக திருவிழா நடைபெறும். ஆனால் இன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பயன்பெறும் வகையில் புத்தக கண்காட்சியை நடத்துவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த புத்தக திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றது முதல் நடைபெறுகிறது. முதல்வர் அரசாணை வெளியிட்டு அதன் மூலம் ஒருங்கிணைப்பு குழு பள்ளி கல்வித்துறை ஆணையாளர் பொது நூலக இயக்குநர் தமிழ்நாடு பாடநூல் கழக துணை இயக்குநர் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர்களின் சங்க நிர்வாகிகள் அனைவரையும் இணைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் கொண்டு புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆட்சியில் தான் சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூலகம் கட்டப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி கிளின்டன் மனைவி தமிழ்நாட்டிற்கு வருகை தந்து இந்த நூலகத்தை பார்வையிட்டு மிகவும் பாராட்டினார்கள். இப்போதும் முதல்வர் தலைமையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் நூற்றாண்டு நூலகம் மிகவும் பிரம்மாண்டமாக தற்போது உள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி கட்டப்பட்டு வருகிறது. இந்த நூலகத்தை முன்னின்று கட்டும் வாய்ப்பை தமிழக முதல்வர் எனக்கு வழங்கியிருக்கிறார். இந்த நூலகத்தை கட்டும் வாய்ப்பு எனக்கு பெருமை சேர்க்கும் என்பதை விட என்னை இந்த அளவிற்கு உயர்த்திய திருவண்ணாமலைக்கே பெருமை ஆகும். நூலகம் என்பது தற்போது மிகவும் இன்றியமையதாதகும். இதன் மூலம் நமது அறிவை வளர்ப்பதால் நமது பொருளாதாரத்தை வளர்த்து கொள்ள முடியும். தற்போது தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 634 நூலகம் செயல்பட்டு வருகிறது. இப்போது நடைபெற்று வரும் மாபெரும் புத்தக திருவிழாவில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அதனை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளவேண்டும்.
புத்தகம் படிப்பதன் மூலம் தங்கள் திறனை வளர்த்து கொள்ளவும், மன அழுத்ததை குறைக்கவும், ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. நமது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் எழுதிய அன்புள்ள ஆசிரியர்களுக்கு என்ற புத்தகத்தை படிக்கும் வாய்ப்பு அமைந்தது. மிகவும் நன்றாக உள்ளது. எனவே அனைவரும் இந்த புத்தகத்தை படித்து பயன்பெற வேண்டும். மேலும் புத்தக திருவிழாவில் விற்பனை செய்யப்படும் புத்தகங்களை வாங்கி படித்து பயன்பெற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இன்று வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் விவரம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 571 பயனாளிகளுக்கு ரூ 1கோடியே 14 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் 428 நபர்களுக்கு பழங்குடியினர் சாதிச்சான்று பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார். உள்ளாட்சி பிரதிநிதிகள்ரூபவ் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.