மேலும் அறிய
காரைக்காலில் இளம்பெண்ணுக்கு தவறான சிகிச்சை - மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்
அரசு மருத்துவமனையில் மருந்து பற்றக்குறையால் வெளியில் வாங்கி கொடுத்ததன் விளைவாக நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணின் உறவினர்கள் வாக்குவாதம்
காரைக்கால் அடுத்த நெடுங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு தவறான மருந்து செலுத்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், இதனால் பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையில் முற்றுகையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்கால் அடுத்து நெடுங்காடு பகுதியில் வேல்முருகன் என்பவரது மனைவி கனிமொழி (31). இவருக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக உடல்நிலை சரியில்லாததால் நெடுங்காடு அரசு ஆரம்ப சுகாதார அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளது. அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் பெண்ணுக்கு ரத்தம் குறைவாக உள்ளதாகவும் சிகிச்சையில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் ரத்தம் அதிகரிக்க தினந்தோறும் ட்ரிப்ஸ் செலுத்த வேண்டும் அந்த வகையானது மருத்துவமனையில் ட்ரிப்ஸ் இருப்பு இல்லை என்றும் வெளியே வாங்கிட்டு வந்து தாருங்கள் என்று கூறியுள்ளனர்.
இதனை அடுத்து பெண்ணின் கணவர் தனியார் மெடிக்கலில் மருந்ததை வாங்கி வந்து கொடுத்துள்ளார். கடந்த இரண்டு நாட்கள் மருந்தை சரியான முறையில் ஏற்றி உள்ளனர். மூன்றாவது நாளாக மருந்துக்கு பதிலாக வேறொரு மருந்து அப்பெண்ணிற்கு ஏறிக் கொண்டுள்ளதை கண்ட கணவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அங்குள்ள செவிலியரிடம் நான் வாங்கிட்டு வந்தது வெள்ளை கலரில் இருக்கும் நீங்கள் ரத்த கலரில் ஏற்றிக் கொண்டு உள்ளீர்கள் என்று கேட்டுள்ளார்.

இதனை அடுத்து சுதாரித்து செவிலியர் மருந்தை நிறுத்தி அதை எடுத்து உள்ளார். இருந்த போதிலும் பெண்ணிற்கு உடல் சோர்வு ஏற்பட்டு மயக்க நிலை வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பெண்ணின் உறவினர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பணியில் வந்த மருத்துவர் தவறு நடந்தது உண்மைதான் என்றும் அதை சரி செய்து விடலாம் என்று கூறியுள்ளார். அதனை ஏற்றுக் கொள்ளாத உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அங்கு வந்த சுகாதுறை இணை இயக்குனர் சிவராஜ் குமாரிடம் உறவினர்கள் முற்றுகையிட்டு புகார் தெரிவித்தனர். விசாரணையில் மருந்து தவறுதலாக கொடுக்கப்பட்டது. உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதாக உறுதி அளித்தார். இதன் அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள். மேலும் அரசு மருத்துவமனையில் மருந்து பற்றக்குறையால் வெளியில் வாங்கி கொடுத்ததன் விளைவாக நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
விழுப்புரம்
அரசியல்
அரசியல்
மதுரை
Advertisement
Advertisement