மேலும் அறிய

தஞ்சாவூர்: அய்யம் பேட்டை வழியாக கபிஸ்தலத்திற்கு பேருந்துகளை இயக்க கோரி சாலை மறியல்

’’தஞ்சையில் இருந்து அய்யம்பேட்டை, கணபதி அக்ரஹாரம் வழியாக கபிஸ்தலம் வரை நகரப் பேருந்து இயக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம்’’

தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் இருந்து கபிஸ்தலத்திற்கும், கும்பகோணத்தில் இருந்து கபிஸ்தலத்திற்கும்  நகர, புறநகர் மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கி வருகின்றது. ஆனால் அய்யம்பேட்டையில் இருந்து கணபதி அக்ரஹாரம் வழியாக கபிஸ்தலத்திற்கு, அரசு பேருந்துகள் இல்லாததால், பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பெரும்பாலானோர் ஏழை விவசாயிகளைகவும், கட்டிடம் கட்டும் பணிக்கும், கூலி விவசாயிகளாக வசித்து வருவதால், அவர்கள் தினந்தோறும் வேலைக்கு செல்வதற்காக, தஞ்சாவூருக்கும், கணபதி அகரஹாரத்திற்கும் சுமார் 10 கிலோ மீட்டர் துாரம் நடந்து சென்றும், சில நேரங்களில் மட்டும் வரும் மின் பேருந்துகளில் சென்று வருகின்றார்கள்.

தஞ்சாவூர்: அய்யம் பேட்டை வழியாக கபிஸ்தலத்திற்கு பேருந்துகளை இயக்க கோரி சாலை மறியல்

இதனால் கூலி விவசாயப்பணிக்கும், சி்ததாள் வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் மாணவ, மாணவிகள் சிரமத்துக்குள்ளாகி வருவதால், அய்யம்பேட்டை, கணபதிஅக்ரஹாரம் வழியாக கபிஸ்தலத்திற்கு நகர பேருந்துகளை இயக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, திருவையாறு-கபிஸ்தலம் சாலை, கணபதிஅக்ரஹாரத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர்: அய்யம் பேட்டை வழியாக கபிஸ்தலத்திற்கு பேருந்துகளை இயக்க கோரி சாலை மறியல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் செல்லத்துரை தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கண்ணையன், மாவட்ட செயலாளர் மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சாலை மறியல் போராட்டம் பற்றி தகவல் அறிந்த பாபநாசம் டிஎஸ்பி பூரணி, தாசில்தார் மதுசூதனன், கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தஞ்சை கோட்ட மேலாளர் செந்தில், வணிகப் பிரிவு துணை மேலாளர் கணேசன், கிளை மேலாளர்கள் அஜய் வெங்கடேசன், சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர் யோகராஜ் ஆகியோர் நேரில் சென்று சாலை மறியல் செய்தவர்களை அழைத்து தனியார் திருமண மண்டபத்தில்  அமரவைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.

தஞ்சாவூர்: அய்யம் பேட்டை வழியாக கபிஸ்தலத்திற்கு பேருந்துகளை இயக்க கோரி சாலை மறியல்

இந்த அமைதி பேச்சுவார்த்தையில், அய்யம்பேட்டை, மாகாளிபுரம், கணபதிஅக்ரஹாரம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் சென்று வருகின்றார்கள், போதுமான பேருந்து வசதி இல்லாததால், இரு சக்கர வாகனத்திலும், நடந்து செல்கின்றனர். இதனால் அவர்களுக்கு மன வேதனை அடைகின்றனர். சில நேரங்களில் தாமதமானால், மன உளைச்சலில் பாதிக்கப்படுகிறார்கள். தமிழக அரசு பெண்கள் அனைவரும் இலவசமாக நகர பேருந்துகளில் செல்லலாம் என உத்தரவிட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக அரசு பேருந்தை இந்த வழிதடத்தில் இயக்க வேண்டும் என்று பொது மக்கள் தெரிவித்தனர். பின்னர் அதிகாரிகள், தஞ்சையிலிருந்து அய்யம்பேட்டை, கணபதி அக்ரஹாரம் வழியாக கபிஸ்தலம் வரை நகரப் பேருந்து இயக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம் வழங்கியதன் அடிப்படையில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் கும்பகோணம்- திருவையாறு சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்Doctors Issue : ’’போதிய மருத்துவர்கள் இல்ல..பெரிய தலைவலியா இருக்கு’’புலம்பும் அரசு மருத்துவர்Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
"நீதி வெல்லட்டும்" கோஷமிட்ட நடிகை கஸ்தூரி.. நீதிமன்றத்தில் பரபரப்பு!
JEE Main 2025: இன்னும் சில நாள்தான்; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிச்சுட்டீங்களா? எப்படி?
JEE Main 2025: இன்னும் சில நாள்தான்; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிச்சுட்டீங்களா? எப்படி?
Karthigai Month 2024: கார்த்திகை தீபம் எப்போது? எந்த நாளில் என்னென்ன விசேஷம்? ஓர் அலசல்
Karthigai Month 2024: கார்த்திகை தீபம் எப்போது? எந்த நாளில் என்னென்ன விசேஷம்? ஓர் அலசல்
Embed widget