மேலும் அறிய

நூற்றாண்டு பழமையான தியேட்டர் உட்பட 3 கட்டடங்களை கையகப்படுத்திய தஞ்சாவூர் மாநகராட்சி

’’தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையரை திரும்பபெறக்கோரி வணிகர்கள் நகர் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்’’

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பழமையான தஞ்சாவூர் யூனியன் கிளப், காவேரி லாட்ஜ், ஜூபிடர் திரையரங்கம் ஆகியவற்றை மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே 100 ஆண்டுகள் கடந்த தஞ்சாவூர் யூனியன் கிளப், காவிரி லாட்ஜ், ஜூபிடர் திரையரங்கம் ஆகியவை செயல்பட்டு வந்தது.  யூனியன் கிளப், மணமகழ்மன்றமாகவும், காவிரி லாட்ஜ் ரெகரேசன் கிளப்பாகவும், ஜூபிட்டர் தியேட்டர் திரைப்படங்கள் ஒடியது. இவற்றில் காவிரி லாட்ஜ், ஜூபிடர் திரையரங்கத்துக்கான 99 ஆண்டுகள் குத்தகை காலம் கடந்த மே மாதத்துடன் முடிவடைந்து விட்டது. இதே போல 100 ஆண்டுகள் கடந்த யூனியன் கிளப்புக்கு ஆவணங்கள் எதுவும் முறையாக இல்லை என கூறப்படுகிறது.

நூற்றாண்டு பழமையான தியேட்டர் உட்பட 3 கட்டடங்களை கையகப்படுத்திய தஞ்சாவூர் மாநகராட்சி

எனவே ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றும் சட்டத்தின்கீழ் ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ளுமாறு தொடர்புடைய நிர்வாகங்களிடம் மாநகராட்சி அலுவலர்கள் சில மாதங்களுக்கு முன்பு அறிவுறுத்தியது. ஆனாலும் அக்கட்டிடங்களை, காலி செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனர். மேலும், மாநகராட்சிக்கு முறையான பதிலும் கூறாமல் இருந்து வந்தனர். எனவே, ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றும் சட்டத்தின் கீழ் இந்த கட்டடங்களைக் கையகப்படுத்தியதற்கான நோட்டீஸை அவற்றின் நுழைவுவாயில் கதவில் ஒட்டி, தண்டோரா மூலம் அறிவிக்க, மாநகராட்சி அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் க.சரவணகுமார் உத்தரவிட்டார். இதன்படி, மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி செயற்பொறியாளர் எம். ராஜசேகரன் அலுவலர்கள், பணியாளர்கள், ஜுபிடர் திரையரங்கத்திற்கு சென்றனர். தொடர்ந்து திரையரங்க வாயில் கதவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதில் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான மேற்கண்ட இடம் தமிழ்நாடு பொது வளாகங்கள் (ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றுதல்) 1975-இன் படி தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மாநகராட்சி வசம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இவ்விடத்தில் நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தகவலை பொது மக்களுக்கு அறிவிக்கும் விதமாக தண்டோரா போடப்பட்டது.

நூற்றாண்டு பழமையான தியேட்டர் உட்பட 3 கட்டடங்களை கையகப்படுத்திய தஞ்சாவூர் மாநகராட்சி

இதையடுத்து காவிரி லாட்ஜ் வாசல்,  யூனியன் கிளப் வாசல் கதவிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதையொட்டி காவல் துறையினர் பாதுகாப்புக்காக அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டனர். இதேபோல காவிரி லாட்ஜ் முன்புறம் உள்ள கடைகளும் தீபாவளி பண்டிகைக்கு பின்பு அகற்றப்பட உள்ளதாகவும் மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். கையகப்படுத்தப்பட்ட யூனியன் கிளப் 29,743 சதுர அடியும், காவிரி லாட்ஜ் 40,390 சதுர அடியும், ஜூபிடர் திரையரங்கம் 13,605 சதுர அடியும் பரப்பளவு கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

நூற்றாண்டு பழமையான தியேட்டர் உட்பட 3 கட்டடங்களை கையகப்படுத்திய தஞ்சாவூர் மாநகராட்சி

இந்நிலையில் தஞ்சாவூர் மாநகர முழுவதும், தமிழக அரசே, தமிழக அரசே, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கேள்வி குறியாக்கி, சட்டத்தை மீறி நியாய தர்மத்தை மீறி, தன்னிச்சையாக செயல்பட்டுவரும் தஞ்சை மாநகராட்சி ஆணையரை கண்டிக்கின்றோம். திரும்ப பெறு திரும்ப பெறு தஞ்சை மாநகராட்சி ஆணையரை திரும்ப பெறு. இவண் வணிகர்கள், பழைய, புதிய பேருந்து நிலையம், தஞ்சாவூர் என சுவரொட்டியில் ஒட்டப்பட்டிருந்தது. இதனால், வணிகர்களுக்கும், மாநகராட்சி ஆணையருக்கும் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், தஞ்சாவூர் மாநகராட்சி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
Embed widget