தஞ்சாவூரில் 2284 பயனாளிகளுக்கு ரூ.17.34 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய உயர்கல்வித்துறை அமைச்சர்
உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் முன்னிலை வகித்து 2284 பயனாளிகளுக்கு ரூ.17.34 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் நடந்த விழாவில் 2284 பயனாளிகளுக்கு ரூ.17.34 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்களை காணொலி வாயிலாக சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார். தொடர்ந்து தஞ்சையில் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார்.
இதில் ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர், தாட்கோ, வருவாய் துறை, பேரிடர் மேலாண்மைத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, வேளாண்மைத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத்துறை, மாவட்ட தொழில்மையம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை, முன்னோடி வங்கி ஆகியவை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் முன்னிலை வகித்து 2284 பயனாளிகளுக்கு ரூ.17.34 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநிலங்களவை எம்.பி., கல்யாணசுந்தரம், எம்எல்ஏக்கள், திருவையாறு துரை.சந்திரசேகரன், கும்பகோணம் அன்பழகன், தஞ்சாவூர் டி.கே.ஜி. நீலமேகம், பட்டுக்கோட்டை அண்ணாத்துரை, பேராவூரணி ந.அசோக்குமார், மேயர்கள் தஞ்சாவூர் சண்.ராமநாதன், கும்பகோணம் க.சரவணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி, துணைமேயர்கள் அஞ்சுகம் பூபதி, சு.,ப.தமிழழகன், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கும்பகோணம் தாலுகா கோவிலாச்சேரி பகுதியை சேர்ந்த 29 பேருக்கு நில எடுப்பு செய்யப்பட்டு விலையில்லா மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டது.