பொங்கல் முடிந்து சென்னை ரிட்டர்னா? தூத்துக்குடியில் இருந்து சிறப்பு ரயில்! முன்பதிவு முழு விவரம்!
பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் மக்களுக்காக வருகிற 19ஆம் தேதி தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக வருகிற 19ஆம் தேதி தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை (15ஆம்தேதி) காலை 8 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் முதன்மை பண்டிகையாகவும். உலகெங்கும் வாழும் தமிழர்களின் அடையாளமாகவும் திகழ்வது பொங்கல் பண்டிகை ஆகும். உயிர்களுக்கு ஆதாரமாக திகழும் உணவுக்கு ஆதாரமாக திகழும் சூரியனைப் போற்றும் விதமாக ஒவ்வொரு தை முதல் நாளும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது.
சென்னை திரும்பும் மக்கள்:
மார்கழி மாதம் நேற்று முடிந்து தை மாதம் இன்று பிறந்துள்ளதை முன்னிட்டு பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்பதால் தமிழ்நாடு முழுவதும் களைகட்டி காணப்படுகிறது.
பொங்கலை முன்னிட்டு சென்னை, பெங்களூர், மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம் என வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் குடும்பங்களுடன் கொண்டாட கடந்த வியாழக்கிழமை முதலே சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கினர். சென்னையில் இருந்து மட்டும் இதுவரை சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பேருந்துகளில் சென்றுள்ளனர். இதுதவிர, ரயில், சொந்த வாகனங்களிலும் சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்றனர்.
சிறப்பு ரயில் விவரம்:
இந்த நிலையில், பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக வருகிற 19ஆம் தேதி தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை (15ஆம்தேதி) காலை 8 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை 4:25 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து கிளம்பும் இந்த சிறப்பு ரயில், திங்கட்கிழமை அதிகாலை 3:45 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மதுரைக்கு இரவு 7:15க்கு வரும் இந்த சிறப்பு ரயில், திருச்சிக்கு இரவு 9:35 மணிக்கு சென்றடையும்.
இதையும் படிக்க: Avaniyapuram Jallikattu 2025 LIVE: சீறும் காளைகள்... அடக்கும் காளையர்கள்! அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. நேரலை!