Pongal 2025: வசூல் வேட்டைதான்! தியேட்டர்களில் தீயாய் நடக்கும் டிக்கெட் புக்கிங் - பொங்கல் குஷிதான்
Pongal 2025 Cinema: பொங்கல் பண்டிகை காரணமாக தொடர் விடுமுறை என்பதால் தமிழில் வெளியாகியுள்ள திரைப்படங்களுக்கு டிக்கெட்டுகள் முன்பதிவு தீவிரமாக நடந்து வருகிறது.
Pongal 2025 Cinema: தை மாதத்தின் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகையாக கோலாகலமாக உலகெங்கும் கொண்டாடப்படடு வருகிறது. இந்த பொங்கல் நன்னாளில் மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறார்கள்.
பொங்கல் ரிலீஸ் படங்கள்:
தமிழ்நாட்டில் வரும் நீண்ட விடுமுறையாக பொங்கல் உள்ளது. பொங்கல் பண்டிகை என்றாலே ஏராளமான திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். நடப்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஷாலின் மதகஜராஜா, ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை, அதர்வா தம்பி ஆகாஷ் முரளியின் நேசிப்பாயா, ராம் சரணின் கேம் சேஞ்சர், பாலாவின் வணங்கான் படங்கள் வெளியாகியுள்ளது.
பொங்கல் முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை முதலே பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். தொடர் விடுமுறை என்பதால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதலே திரையரங்கில் குவிந்து வருகின்றனர். சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பெருநகரங்களில் பலரும் தங்கள் குடும்பத்துடன் திரைப்படம் பார்க்க குவிந்து வருகின்றனர்.
ஜோராக நடக்கும் டிக்கெட் முன்பதிவு:
காதலிக்க நேரமில்லை, மதகஜராஜா, நேசிப்பாயா, வணங்கான் படங்களுக்கு டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருகிறது. குறிப்பாக, விஷால் நடிப்பில் 12 வருடங்களுக்குப் பிறகு ரிலீசாகியுள்ள மதகஜராஜா படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியான கேம் சேஞ்சர் படம் ரசிகர்களிடம் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
இன்று முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர் விடுமுறை என்பதால் தொடர்ந்து திரையரங்குகளில் டிக்கெட்டுகள் முன்பதிவு தீவிரமாக நடந்து வருகிறது. புக் மை ஷோவில் டிக்கெட்டுகளின் முன்பதிவு மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த படங்கள் மட்டுமின்றி தெலுங்கில் ரிலீசாகியுள்ள டக்கு மகாராஜா, சங்கராந்தி வஸ்துனம் படத்திற்கும் ரசிகர்கள் கூட்டம் காணப்படுகிறது.
மகிழ்ச்சி:
மிக நீண்ட விடுமுறை என்பதால் தமிழ் திரையுலகத்திற்கு பொங்கல் பண்டிகை என்பது எப்போதும் மிகவும் முக்கியமானது ஆகும். இதனால், பொங்கலுக்கு பெரிய நடிகர்கள் முதல் சின்ன நடிகர்களின் படங்கள் வரை பல படங்கள் ரிலீசாகும். இந்த சூழலில், நடப்பு பொங்கலுக்கு வசூல் வேட்டையை தமிழ் திரையுலகம் நடத்தி வருகிறது. பொங்கல் பண்டிகை முடிந்தும் அடுத்த சில தினங்களுக்கு திரையரங்கில் கூட்டம் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெருநகரங்கள் மட்டுமின்றி நகர்ப்புறங்களில் உள்ள தியேட்டர்களிலும் ரசிகர்கள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது. குடும்பங்களுடன் மக்கள் தியேட்டர்களுக்கு வருவதால் திரையரங்க உரிமையாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மக்கள் குடும்பங்களுடன் வருவதால் திரைப்பட விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.