Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPS
அதிமுக எம்.எல்.ஏக்களான கே.பி.முனுசாமியும் எஸ்.பி.வேலுமணியில் தனித்தனியே செயல்படுவது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் தலைவலியாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி 11 ஆம் தேதி அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதில்லை என்று முடிவுசெய்யப்பட்டது. இந்த கூட்டத்திற்கு முன்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைட் தனிப்பட்ட முறையில் அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
அப்போது அதிமுக பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி சட்டமன்றத்துக்கு இபிஎஸ் வராத நாட்களில் நடந்த சிழ சம்பவங்கள் குறித்து கவலையோடு விவரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இபிஎஸ் இரண்டு நாட்கள் மட்டுமே சட்ட மன்றத்திற்கு வந்தார்.காய்ச்சல் காரணமாக தான் வர இயலாத நாட்களில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்ய வேண்டாம் என்றும் அவையிலேயே இருந்து திமுகவிற்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து பேசுமாறும் எடப்பாடி அறிவுறுத்தி இருந்தாராம். ஆனால் 9 ஆம் தேதி சட்டமன்றத்தில் வேலுமணி எழுந்திருக்க, அவரோடு சேர்ந்து எதிர்கட்சித் துணை தலைவர் உதயகுமாரும் எழுந்தார். பின்னர் 35 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் திமுகவிற்கு எதிராக கோசமிட்டபடி வெளியேறினார்கள்.
இதைப் பார்த்து அதிர்ந்து போன கே.பி.முனுசாமி வேறு வழியின்றி அவரும் எழுந்து வெளியே சென்று இருக்கிறார். அவரோரு 13 எம்.எல்.ஏக்கள் பின்னால் நின்றிருக்கின்றனர். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு வேலுமணி சட்டமன்றத்தில் தனியாக செயல்படுகிறார் அதற்கு உதயகுமாரும் உதவுகிறார் என்று இபிஎஸ் இடம் சொல்லியிருக்கிறார் கே.பி.முனுசாமி.
ஏற்கனவே அதிமுகவில் வேலுமணிக்கு என்று தனி ஆதரவாளர்கள் கூட்டம் இருப்பதாக கூறப்படும் நிலையில்,பேரவையில் முனுசாமிக்கும் வேலுமணிக்கும் நடந்த இந்த உரசல் இபிஎஸ் வரை சென்றிருக்கிறது. இதற்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தனது பேச்சு மூலம் இபிஎஸ் பதில் கொடுத்திருக்கிறார்.
அதாவது, “பொங்கள் பண்டிகைக்கு பின் 234 சட்டமன்ற தொகுதிகளிக்கும் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். கட்சியின் பூத் கமிட்டி முதல் அனைத்தையும் ஆய்வு செய்ய உள்ளேன். நமக்கு மாணவரனி பலவீனமாக உள்ளது. 27 வயதுக்குட்பட்டோருக்கு மாணவர் அணியில் பதவி கொடுங்கள். இந்த சுற்றுப்பயணத்தை நான் தம்பி வேலுமணியின் மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்க போகிறேன்.”என்று இபிஎஸ் பேசியிருக்கிறார்.





















