மேலும் அறிய

பொன்முடி மீது சேறு வீசிய சம்பவம்.. கிராமத்தில் போலீஸ் அடக்குமுறையா? கொதித்த அண்ணாமலை!

பொன்முடி மீது சேறு வீசியது குறித்து விசாரணை என்ற பெயரில், கிராம மக்களை அழைத்துத் துன்புறுத்தியதாகவும் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள் உட்பட அனைவரையும் பலவந்தமாகக் கைது செய்ததாகவும் கூறப்படுகிறது.

விழுப்புரத்தில் கடந்த மாதம் ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை பார்வையிட சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதாகக் கூறி இருவேல்பட்டு கிராம மக்களை, காவல்துறை அதிகாரிகள் துன்புறுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. 

எக்ஸ் தளத்தில் இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பதிவில், "மெட்ரோ தூணில் ஒட்டப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் போஸ்டர் மீது செருப்பால் அடித்த வயதான தாயார் ஒருவரைத் தேடி அலைந்தார்கள். தற்போது, அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய பொதுமக்களைத் தேடி அலைகிறார்கள்.

அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு:

திமுக ஆட்சி நடக்கும் லட்சணத்திற்கு, இனி இதுவே முழு நேர வேலையாக இருக்கும் எனத் தெரிகிறது. கடந்த டிசம்பர் மாதம் விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தில், ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளைப் பார்வையிடச் சென்ற அமைச்சர் பொன்முடி, காரில் இருந்து இறங்காமல், பாதிப்பு குறித்து விசாரித்ததால், அவர் மீது சேறு வீசப்பட்டிருக்கிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காததால் ஏற்பட்ட ஆதங்கத்தாலும், இயலாமையினாலும் நடைபெற்ற நிகழ்வே தவிர, தனிப்பட்ட காரணங்களுக்காக அல்ல. இதனைப் பெருந்தன்மையாக விட்டு விடுவதாக அமைச்சர் பொன்முடி அப்போது கூறிவிட்டு, தற்போது, அந்தக் கிராம மக்கள் மீது காவல்துறையை ஏவி விட்டு வெறியாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

விசாரணை என்ற பெயரில், கிராம மக்களைக் காவல் நிலையம் அழைத்துத் துன்புறுத்துவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள் உட்பட அனைவரையும் பலவந்தமாகக் கைது செய்திருக்கிறார்கள். காவல்துறை ஆய்வாளர் ஒருவர், ஒரு சகோதரியின் கைகளைப் பிடித்து இழுக்கும் காணொளியைக் காண நேர்ந்தது.

இது பெண்களைக் கைது செய்யும்போது, மகளிர் காவலர்கள் இருக்க வேண்டும் என்ற அடிப்படை வரைமுறையை முற்றிலும் மீறியிருப்பதாகும். புயல் பாதிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள், இன்னும் முழுமையாக மீண்டெழவில்லை.

அப்பாவி மக்களைத் துரத்துவது ஏன்?

திமுக அரசு புயல் பாதிப்புகளைச் சரியாகக் கணிக்கத் தவறியதோடு, மிகவும் மெத்தனப் போக்கில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டதைத் தமிழக மக்கள் அறிவார்கள். நான்கு பேரை வைத்து சினிமா ஷூட்டிங் நடத்தி, நல்லாட்சி நடக்கிறது என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சர்களுக்கு, பொதுமக்களிடையே இருக்கும் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல், பொதுமக்கள் மீது அதிகார வன்முறையைப் பிரயோகிக்கிறார்கள்.

முதலமைச்சர் ஸ்டாலின், தங்கள் ஆட்சியின் அவலத்தைச் சரி செய்யாமல், அப்பாவி பொதுமக்களைத் துரத்துவது ஏன்? திமுக அரசு, இந்த உளுத்துப் போன காரணங்களைச் சொல்லி பொதுமக்களைப் பழிவாங்குவதை நிறுத்தி விட்டு, ஃபெஞ்சல் புயல் நிவாரணப் பணிகள், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கிறதா என்பதை உறுதி செய்யும் பணிகளில் உடனடியாக கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும், இருவேல்பட்டு கிராம மக்கள் மீதான நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. காளை குத்தியதில் வீரர் பலி!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. காளை குத்தியதில் வீரர் பலி!
Avaniyapuram Jallikattu 2025 LIVE: சீறும் காளைகள்... அடக்கும் காளையர்கள்! அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. நேரலை!
Avaniyapuram Jallikattu 2025 LIVE: சீறும் காளைகள்... அடக்கும் காளையர்கள்! அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. நேரலை!
"மீனவர்களுக்கு சரியான நேரத்தில் வானிலை எச்சரிக்கை கிடைக்கிறது" பிரதமர் மோடி பெருமிதம்!
சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் ; ஐயனை நோக்கி திருவாபரண பெட்டி ; புராண கதை தெரியுமா உங்களுக்கு !
சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் ; ஐயனை நோக்கி திருவாபரண பெட்டி ; புராண கதை தெரியுமா உங்களுக்கு !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. காளை குத்தியதில் வீரர் பலி!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. காளை குத்தியதில் வீரர் பலி!
Avaniyapuram Jallikattu 2025 LIVE: சீறும் காளைகள்... அடக்கும் காளையர்கள்! அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. நேரலை!
Avaniyapuram Jallikattu 2025 LIVE: சீறும் காளைகள்... அடக்கும் காளையர்கள்! அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. நேரலை!
"மீனவர்களுக்கு சரியான நேரத்தில் வானிலை எச்சரிக்கை கிடைக்கிறது" பிரதமர் மோடி பெருமிதம்!
சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் ; ஐயனை நோக்கி திருவாபரண பெட்டி ; புராண கதை தெரியுமா உங்களுக்கு !
சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் ; ஐயனை நோக்கி திருவாபரண பெட்டி ; புராண கதை தெரியுமா உங்களுக்கு !
Pongal 2025: வசூல் வேட்டைதான்! தியேட்டர்களில் தீயாய் நடக்கும் டிக்கெட் புக்கிங் - பொங்கல் குஷிதான்
Pongal 2025: வசூல் வேட்டைதான்! தியேட்டர்களில் தீயாய் நடக்கும் டிக்கெட் புக்கிங் - பொங்கல் குஷிதான்
ஒத்திவைக்கப்பட்ட UGC நெட் தேர்வு.. மாற்றியமைக்கப்பட்ட தேர்வு தேதியை அறிவித்த NTA
ஒத்திவைக்கப்பட்ட UGC நெட் தேர்வு.. மாற்றியமைக்கப்பட்ட தேர்வு தேதியை அறிவித்த NTA
பொங்கல் முடிந்து சென்னை ரிட்டர்னா? தூத்துக்குடியில் இருந்து சிறப்பு ரயில்! முன்பதிவு முழு விவரம்!
பொங்கல் முடிந்து சென்னை ரிட்டர்னா? தூத்துக்குடியில் இருந்து சிறப்பு ரயில்! முன்பதிவு முழு விவரம்!
Ajith Kumar :
Ajith Kumar : "விடாமுயற்சிக்கும் உந்து சக்தி" உங்கள் அன்புக்கு நன்றி! அஜித் வெளியிட்ட பொங்கல் பரிசு
Embed widget