மேலும் அறிய

சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் ; ஐயனை நோக்கி திருவாபரண பெட்டி ; புராண கதை தெரியுமா உங்களுக்கு !

சபரிமலை பொன்னம்பல மேட்டில் இன்று மகர ஜோதியாக கட்சியளுக்கும் ஐயப்பனை காண 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.

சபரிமலையில் மகரஜோதி தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கை முன்னிட்டு கடந்த மாதம் நடை திறக்கப்பட்டது. தினசரி சாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

சபரிமலையில் மகரஜோதி தரிசனம் இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதியை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த நாளில் ஐயப்பன் விக்கிரகத்தில் அணிவிக்கும் ஆபரணங்கள் பந்தளம் அரண்மனையிலிருந்து கொண்டு வரப்படுகிறது. நேற்று முன்தினம்  அதிகாலை, 5:00 மணி முதல் பந்தளம் வலியக்கோயிக்கல் சாஸ்தா கோவிலில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்ட திருவாபரணங்களை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். மதியம்,  பின்னர் திருவாபரண பவனி புறப்படுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. பேழைகள் அடைக்கப்பட்டு கோவிலில் உச்ச பூஜை நடந்தது.

தொடர்ந்து தீபாராதனைக்கு பின்னர் பந்தளம் ராஜ பிரதிநிதி ராஜராஜ வர்மாவுக்கு உடைவாள் வழங்கப்பட்டதும், திருவாபரண பேழைகள் கங்காதரன் குருசாமி குழுவினரின் தலையில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, கோவிலில் இருந்து திருவாபரண பேழைகள் வெளியே வந்த போது, ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டது. பக்தர்களின் சரண கோஷம் விண்ணை தொடும் அளவு எழுந்தது. தொடர்ந்து, திருவாபரண பவனி புறப்பட்டது.

மகரஜோதி பூஜைக்கு முன்னோடியாக நடைபெறும் சுத்தி கிரியைகள் சன்னிதானத்தில் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் சுத்திகிரியை பூஜைகளை நடத்தினார். இன்று மதியம் உச்ச பூஜைக்கு முன்னால் பிம்பசுத்தி பூஜைகள் நடைபெறும்.

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையை இன்று மாலை 6.25-க்கு அய்யப்பனுக்கு திருவாபரணம் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து, பொன்னம்மபல மேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறும். இதையொட்டி, எருமேலியில்  அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் நடைபெற்றது. அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் இன்று சந்நிதானத்தை வந்தடையும். இந்த ஊர்வலத்துக்கு சரங்குத்தியில் தேவசம்போர்டு சார்பில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்படும்.

அப்போது ஐயப்பன் கூறியதை மன்னரிடம் எடுத்துரைக்கிறார் அகத்தியர்...

‘‘மன்னராக இருந்தாலும் ஒரு மண்டல காலம் கடும் பிரம்மச்சரிய விரதத்தை கடைபிடித்து, அனைத்து ஆடம்பரம், வசதிகள், சுகபோக குடும்ப வாழ்க்கையை புறம்தள்ளி, ஆணவம், காமம், குரோதம் உள்ளிட்ட அனைத்தையும் துறந்தீர். பின்பு சரணாகதி நிலையில் மனிதனின் உடலில் உள்ள ஆறுநிலையை உணர்த்தக் கூடிய அந்த ஆறு ஆதார தலங்களையும் கடந்து ஐயப்பன் அவதாரங்கள், பரிவாரங்களை வணங்கி, ஐயப்பன் கூறிய உபதேசங்களை பின்பற்றி, கடைசியாக ஏழாவது சக்கரமான மகர ஜோதியை தரிசனம் செய்தீர்.

அதன்படி உங்கள் (முதல் பக்தர்) வழியிலேயே அனைத்து பக்தர்களும் பின்பற்றி வருவார்கள். ஐயப்பனுக்கு அரண்மனையில் இருந்து கொண்டு வரும் அங்கியை (உடை) மண்டல பூஜை நாளிலும், திருவாபரண பெட்டியில் உள்ள திருமுகம் (சாஸ்தா முகம்) பரபா மண்டலம் (திருவாச்சி), பெரியகத்தி, சிறிய கத்தி, 2 யானை சிலைகள், ஒரு புலி சிலை, வலம்புரி சங்கு, பூத்தட்டு, நவரத்தின மோதிரம், தங்கம், வில்வம், எருக்கம் பூ, மணி மாலைகள் மற்றும் வெள்ளி பெட்டியில் இருக்கும் தங்கத்தால் ஆன பூஜை பாத்திரங்கள் ஆபரணங்களை மகர நாளிலும் ஏற்றுக்கொள்ளுவார்.

ஐயப்பன் ஆசிபெற்ற மஞ்சமாதாவிற்கும் கொடி பெட்டியில் கொண்டு வரப்படும் ஆபரணம் (யானை ஊர்வலம் பொருட்கள், நெற்றி பட்டம், 2 கொடிகள், குடை) அணிவித்து வணங்க வேண்டும். இந்த திருவாபரண பெட்டிக்கு பாதுகாப்பாகவும், வழிகாட்டியாகவும் பெருமாளின் வாகனமான கருடன் (பருந்து) வரும், கருடன் அனுமதி (வந்த பிறகு) கிடைத்த பிறகே திருவாபரணம்பெட்டி புறப்பட வேண்டும். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இம்முறை தனிச்சிறப்புடன் விளங்கும். அதன்படி எல்லா வகையிலும் (ஐயப்பன் கோயில் வழிபாட்டு முறையில்) தங்களுக்கான முக்கியத்துவத்தை என்றென்றும் வழங்குவார் என ஆசி வழங்கி அகத்தியர் முனிவர் வழி அனுப்பி வைத்தார்.

ஐயப்பன் கடவுளாக இருந்தாலும் கூட, தான் வளர்த்த மகன் என்பதால், கோயிலை விட்டு புறப்பட மனம் இல்லாமல் தந்தை பாசத்துடன் தயங்கி நிற்கிறார் (சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு இந்த அனுபவம் இன்றும் ஏற்படுகிறது). ஒருவழியாக மனதை தேற்றிக்கொண்டு, சன்னிதானத்தில் இருந்து 18 படி வழியாக கீழே இறங்க துவங்கினார். ஐயப்பனின் பரிவாரங்கள் துணையோடு, தான் சென்ற பம்பா, எரிமேலி பெருவழிபாதையின் வழியாக திரும்பிய மன்னர் ராஜசேகரபாண்டியன், செல்லும் வழியிலும், தன்னை பாதுகாப்பாக சபரிமலை கொண்டு வந்து திருப்பும் பரிவாரங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கற்பூரம் ஏற்றி, சிதறு தேங்காய் உடைத்து வழிபட்டவாறு பந்தள அரண்மனையை அடைந்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ABP Premium

வீடியோ

Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
iPhone 16 Discount: ஐபோன் 16 பிரியர்களே முந்துங்க.! சலுகைகள் மூலமா ரூ.55,000-க்கு கிடைக்குது; வாங்குவது எப்படி.?
ஐபோன் 16 பிரியர்களே முந்துங்க.! சலுகைகள் மூலமா ரூ.55,000-க்கு கிடைக்குது; வாங்குவது எப்படி.?
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
Most Cheapest Cars India: சராசரி மக்கள் வாங்குவதற்கு மலிவான கார் எது.? குறைந்த விலையில் கிடைக்கும் டாப் 5 கார்கள் லிஸ்ட்
சராசரி மக்கள் வாங்குவதற்கு மலிவான கார் எது.? குறைந்த விலையில் கிடைக்கும் டாப் 5 கார்கள் லிஸ்ட்
Embed widget