மேலும் அறிய
Advertisement
திருமக்கோட்டை சுழலி மின் உற்பத்தி நிலையம் வடசென்னைக்கு மாற்றம் - விவசாயிகள் எதிர்ப்பு
நிலத்தடி நீர் பற்றாக்குறை உள்ளதால் அதனை காரணம் காட்டி வடசென்னைக்கு மாற்றம் செய்வதற்கான முயற்சியை மறைமுகமாக மேற்கொண்டுள்ளது.
திருமக்கோட்டை சுழலி மின் உற்பத்தி நிலையத்தை வடசென்னைக்கு மாற்றம் செய்ய டெண்டர் விடுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்
பி ஆர்.பாண்டியன் மன்னார்குடி பாமணி உர ஆலையில் உற்பத்தி குறித்து நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளரகளிரடம் தெரிவித்ததாவது: காவிரி டெல்டாவில் மையப் மாவட்டமான திருவாரூரில் இரண்டு உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளது. ஒன்று திருமக்கோட்டை சுழலி மின் உற்பத்தி நிலையம் ஆகும். இந்தியாவில் முதன்முதலாக புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையமாகும். எரிவாயுவை மூலப்பொருளாகக் கொண்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் பற்றாக்குறைய காரணம் காட்டி 110 மெகாவாட் உற்பத்ததிறன் கொண்ட இந்நிலையத்தை வடசென்னைக்கு மாற்றுவதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் 12.06.2023க்குள் டெண்டர் கோரி உள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனை உடனடியாக கைவிட வேண்டும். குறிப்பாக மன்னார்குடி நகரம் மற்றும் சுற்றி இருக்கிற நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் இதன் மூலம் மின்சாரம் தடை இன்றி பெற்று வருகிறது. விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் தடை இன்றி வழங்கப்பட்டு வருகிறது. இதனை நம்பி 2 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்து வருகிறார்கள்.
உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் உள்ளிக்கோட்டை, மூவாநல்லூர் துணை மின் பகிர்மான நிலையங்கள் மூலம் பங்கிட்டு வழங்கப்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் பற்றாக்குறை உள்ளதால் அதனை காரணம் காட்டி வடசென்னைக்கு மாற்றம் செய்வதற்கான முயற்சியை மறைமுகமாக மேற்கொண்டுள்ளது. குறிப்பாக குத்தாலத்தில் அமைக்கப்பட்டுள்ள சுழலி மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலத்தடி நீர் பற்றாக்குறையை போக்குவதற்கு குளிரூட்டப்பட்ட புதிய தொழில்நுட்பம் முறையில் மாற்றம் செய்து நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. அதனை பின்பற்றி திருமக்கோட்டை நிலையத்தையும் செயல்பாட்டுக்கு கொண்டுவந்து உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் தலையிட்டு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
காவிரி டெல்டாவில் துவக்கப்பட்ட முதல் தொழிற்சாலையாக பாமனி உர ஆலை துவக்கப்பட்டது. இது கடந்த பல ஆண்டுகளாக உற்பத்தியை நிறுத்தி வைத்தும்,குறைத்தும் விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்தி விட்டார்கள். தற்போது உலகம் முழுமையிலும் டிஏபி, யூரியா, பொட்டாஷ் போன்ற உரங்கள் தட்டுப்பாடு உள்ள நிலையில் பாமணி உர ஆலையில் தயாரிக்கப்படும் உரம் முழுமையும் வேப்பம் கொட்டையை மூலப் பொருளாக கொண்டு தயாரிக்கப்படுபவை ஆகும். இதன் மூலம் நல்ல மகசூல் கிடைக்கும்,மண்வளம் பாதுகாக்க முடியும், பயிர்கள் நோய் தாக்குதலில் இருந்து தடுக்க முடியும். பன்முகத் தன்மை கொண்ட இந்த உரம் தற்போதைய நிலையில் அவசிய தேவையாகியுள்ளது. தற்போது 24 வகையான பயிர் ஊக்கிகள் தயாரிப்பு செய்து வருகின்றனர். உற்பத்தி பெருக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்
பட்டுள்ளது பாராட்டுக்குறியது. வரவேற்கதக்கது. இருப்பினும் தேவைக்கு ஏற்ப உற்பத்தி பெருக்கத்தை மேற்கொள்வதற்கு உரிய அடிப்படை கட்டமைப்புகளை புதிய தொழில்நுட்பத்துடன் மேற்கொள்ள முதலமைச்சர் நேரில் பார்வையிட வேண்டும். மத்திய அரசு நேரடி பார்வையில் உர உற்பத்தி நிறுவனங்களை துவக்கி செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் நிதி உதவி பெற்று பாமணி உர ஆலயை விரிவாக்கம் செய்து டெல்டா பகுதி விவசாயிகளை உரத்தட்டுப்பாட்டில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion