TVK resolution: முதல் தீர்மானமே நீட் எதிர்ப்புதான்.. தவெக மாநாட்டில் பாஜக எதிர்ப்பு.. விஜய் போட்ட ஸ்கெட்ச்!
தவெக மாநாட்டில் மொத்தம் 19 தீர்மானங்கள் நிறைவேற்ற இருப்பதாகக் கூறப்படுகிறது. முதல் தீர்மானமாக நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக மாநாட்டில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்ட ஒழுங்கு பிரச்னை, ஒரே நாடு ஒரே தேர்தல், நீட் தேர்வு, மின்சார கட்டண உயர்வு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய பயணத்தை தவெக தலைவர் விஜய் மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியை, அதன் தலைவர் விஜய் கடந்த மாதம் 22ஆம் தேதி சென்னை, பனையூரில் அறிமுகம் செய்தார்.
தவெக மாநாட்டில் 19 தீர்மானங்கள்:
விஜய்யின் கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையமும் அனுமதி வழங்கியுள்ளது. இந்த சூழலில், ஒட்டு மொத்த மாநிலமே எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த தவெக கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று தொடங்கியுள்ளது.
கட்சி தொடங்கப்பட்டதில் இருந்தே தவெகவின் கொள்கை என்ன, கோட்பாடு என்ன என பல்வேறு தரப்பினர் தினம் தினம் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அதற்கு தனது தீர்மானங்கள் முதல் விஜய் பதில் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, மாநிலத்தில் ஆட்சியில் உள்ள திமுகவை எதிர்க்கும் விதமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, முதல் தீர்மானமாக நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதை தவிர்த்து 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சட்ட ஒழுங்கு பிரச்னை, ஒரே நாடு ஒரே தேர்தல், மின்சார கட்டண உயர்வு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
பாஜக எதிர்ப்பை கையில் எடுத்த விஜய்:
பாஜக, விஜய்-க்கு இடையேயான போட்டி இன்று, நேற்று தொடங்கவில்லை. மெர்சல் படத்திலேயே தொடங்கிவிட்டது. அப்போது அந்த படத்தில் ஜிஎஸ்டி உள்ளிட்ட மத்திய அரசின் சில நடவடிக்கைகளை விமர்சனம் செய்யும் வகையில் வசனம், காட்சிகள் இடம்பெற்றிருந்ததாக பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
அந்த சமயத்தில், நடிகர் விஜய்யை, ‛ஜோசப் விஜய்' என கூறி, பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பரபரப்பை கிளப்பினார். அதாவது விஜய் ஒரு கிறிஸ்தவர் என்பதால்தான் மத்திய அரசை விமர்சனம் செய்கிறார் எனும் வகையில் எச். ராஜா கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும், விஜய் தனது கிறிஸ்தவ அடையாளளமான ஜோசப் என்ற பெயரை பயன்படுத்தாமல் விஜய் என்ற பெயரில் திரைப்படங்களில் நடித்து மக்களை ஏமாற்றுவதாகவும் விமர்சித்து இருந்தனர். இதற்கு, நடிகர் விஜய், எந்த வித எதிர்வினையும் ஆற்றவில்லை. ஆனாலும், இந்த விமர்சனத்துக்கு பிறகு நடிகர் விஜய் தொடர்பான சில அறிவிப்புகளில் அவரது பெயர் ஜோசப் விஜய் என இடம்பெற்று கவனம் ஈர்த்தது.