Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள குபேரா திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது
குபேரா
ஒரு பக்கம் இயக்கத்தில் தீவிரமாக களமிறங்கியிருக்கும் தனுஷ் இன்னொரு பக்கம் பல்வேறு வித்தியாசமான கதைக்களங்களில் நடித்தும் வருகிறார். கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டம் மில்லர் திரைப்படம் தனுஷூக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதேபோல் இந்த ஆண்டு வெளியான ராயன் திரைப்படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. தனுஷ் ரசிகர்கள் அடுத்து மிக ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கும் படம் குபேரா. தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் , ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகர்ஜூனா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. தேவிஶ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைக்கிறார்.
குபேரா க்ளிம்ப்ஸ்
குபேரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த மார்ச் மாதம் வெளியாகியது. பரட்டைத்தலையும் படத்தின் டைட்டிலுக்கு நேர் மாறான தோற்றத்தில் இந்த போஸ்டரில் காணப்பட்டார். குபேரா படத்தின் கதை குறித்த எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது. இப்படியான நிலையில் இன்று குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது
A blend of action, drama, and cinematography!
— Mahesh Babu (@urstrulyMahesh) November 15, 2024
All the very best…🙂#KuberaGlimpse https://t.co/TwLo74arko @dhanushkraja @iamnagarjuna @iamRashmika @sekharkammula @ThisIsDSP@AsianSuniel #Puskurrammohan @SVCLLP @amigoscreation @KuberaTheMovie
பணத்தை மையப்படுத்திய ஒரு கதைக்களம் குபேரா என்பதை டைட்டிலை வைத்து யூகிக்க முடிகிறது. தற்போது வெளியாகியுள்ள க்ளிம்ப்ஸ் வீடியோவில் தனுஷ் பிச்சைக்காரனக இருக்க நாகர்ஜூனா செல்வம் படைத்தவராக இருக்கிறார். ரஜினியின் அருணாச்சலம் படத்தின் வருவது போல் ஒரு அறையில் கட்டுக்கட்டாக பணம் குவிந்திருக்கும் காட்சியும் இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. முதல் கிழிந்த துணிகளுடனும் பரட்டைத் தலையுடனும் வரும் தனுஷ் கடைசி ஷாட்டில் வேஷ்டி சட்டையில் தோன்றுகிறார். நாகர்ஜூனா தனுஷ் கதாபாத்திரங்கள் பற்றி நமக்கு ஒரு ஐடியா கிடைத்தாலும் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திரம் ரகசியமாகவே இருந்து வருகிறது. தேவிஶ்ரீ பிரசாதின் பின்னணி இசை படத்திற்கு த்ரில்லர் மூடை கொடுக்கிறது.
இட்லி கடை
குபேரா படம் தவிர்த்து தனுஷ் தற்போது இட்லி கடை என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். நித்யா மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். 2025 ஆம் ஆண்டு ஏப்ரம் மாதம் இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது