Top 10 News Headlines: நாட்டில் 811 பேருக்கு ஒரு மருத்துவர், ஒலிம்பிக் கமிட்டியின் முதல் பெண் தலைவர்- டாப் 10 செய்திகள்
Top 10 News Headlines Today Mar 22: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

கவப்னம் ஈர்க்கும் கூட்டுக் குழு கூட்டம்
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கூட்டு கூட்டம் தொடங்கியது. கேரளா, தெலங்கானா முதலமைச்சர்கள், கர்நாடகா துணை முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் இதில் பங்கேற்றுள்ளதால், தமிழ்நாடு தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
முதலமைச்சரை பாராட்டிய கர்நாடகா துணை முதலமைச்சர்
“இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்கும் வகையில், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல் படியைஎடுத்து வைத்துள்ளது பெருமையாக உள்ளது. தொகுதிகள் குறைக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க மாட்டோம். அனைவரும் ஒன்றிணைந்து வெற்றியை நோக்கி பயணிப்போம்
”நம்பி கெட்டவர்கள் யாருமில்லை”
"நான் பதவிக்காக அரசியலுக்கு வந்தவன் அல்ல, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என மக்களுக்குத் தொண்டாற்றவே அரசியலுக்கு வந்த தொண்டன் நான்! என்னுடைய அரசியல் பயணம் நதி போன்றது, என்னை நம்பாமல் கெட்டவர்கள் பலர், நம்பி கெட்டவர்கள் ஒருவர் கூட கிடையாது” - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
ரயில்வே ஒப்பந்த ஊழியர் கைது
ஓடும் ரயிலில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரயில்வே ஒப்பந்த ஊழியர் கைது புனே - கோவை இடையே செல்லும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோடு அருகே வந்தபோது அதிகாலை 4 மணியளவில் ஏ.சி. பெட்டியில் பயணித்த 8 வயது சிறுமிக்கு, படுக்கை விரிப்புகளை மாற்றும் ஒப்பந்த ஊழியர் நவீதம் சிங் (30) பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
கோடிக்கணக்கில் நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள்
நாடு முழுவதும் கிரிமினல் வழக்குகள் மட்டும், உச்ச நீதிமன்றத்தில் 17,647, உயர் நீதிமன்றங்களில் 18.34 லட்சம், மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் 3.46 கோடி எண்ணிக்கையில் நிலுவையில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய சட்ட அமைச்சகம் தகவல் தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில், போலி சாட்சியம் தொடர்பாக 7.72 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நாட்டில் மக்கள் தொகைக்கான மருத்துவர் விகிதம் 1:811
நாட்டில் 811 பேருக்கு ஒரு மருத்துவர் இருப்பதாக நாடாளுமன்ற மக்களவையில் சுகாதார அமைச்சகம் தகவல். தேசிய மருத்துவ ஆணையத்தின் தரவுகளின்படி, 13.86 லட்சம் அலோபதி மருத்துவர்களும், 7.51 லட்சம் ஆயுஷ் (AYUSH) மருத்துவர்களும் பதிவு செய்து தொழில் செய்வதாகவும் தெரிவிப்பு
இந்தியாவில் காமன்வெல்த்
24-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2030-ம் ஆண்டு நடைபெற உள்ளது. 2036-ல் நடைபெற ஒலிம்பிக் தொடரை நடத்தும் வாய்ப்பை பெற இந்தியா முயற்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை பெற இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பித்துள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முதல் பெண் தலைவர்
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் புதிய தலைவர் பதவிக்கு 7 பேர் போட்டியிட்டனர்.
ஐ.ஓ.சி.யின் 97 உறுப்பினர்களில் 49 பேரின் வாக்குகள் பெற்று, முன்னாள் நீச்சல் வீராங்கனையும், ஜிம்பாப்வே விளையாட்டுத்துறை மந்திரியுமான கிறிஸ்டி கவன்ட்ரி புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 131 ஆண்டு கால ஒலிம்பிம் கமிட்டி வரலாற்றில் இந்த பதவியை பெறும் முதல் பெண் என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளார்.
இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது ஐ.பி.எல்
18வது ஐ.பி.எல் போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று கோலாகலமாகத் தொடங்குகின்றன. ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் 13 இடங்களிலும் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு. முதல் போட்டியில் கொல்கத்தா - பெங்களூரு அணிகள் பலப்பாட்சை
”கோலியின் பிரச்னை இதுதான்” - ஃபின்ச்
ரோகித் சர்மாவிடம் தரமான வீரர்கள் இருப்பதால் ஐபிஎல் போட்டியில் அவர் ரிஸ்க் எடுத்து ஆடுகிறார். ஆனால், அதுவே விராட் கோலியால் அப்படி செய்ய முடிவது இல்லை. காரணம் அவரது அணி அப்படி. கோலி சிறப்பாக விளையாடுகிறார், ஆனால் அவரது ஆட்டம் நிலையானதாக இல்லை” -ஆரோன் ஃபின்ச், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

