Meerut Murder: கணவரை துண்டுகளாக வெட்டி, சிமெண்ட் ட்ரம்மில் அடைத்த மனைவி - காதலனுடன் குத்தாட்டம், வீடியோ வைரல்
Meerut Murder: கணவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு எதுவுமே நடக்காதபடி, காதலனுடன் உல்லாசமாக சுற்றி திரிந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

Meerut Murder: மீரட்டில் கணவரை கொடூரமாக கொலை செய்த பெண், காதலனுடன் சேர்த்து கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலனுடன் சிக்கிய கொலைகார மனைவி
மார்ச் 3 ஆம் தேதி மீரட்டில் தனது கணவரும் முன்னாள் வணிகக் கடற்படை அதிகாரியுமான சவுரப் ராஜ்புத்தை கொடூரமாக கொலை செய்ததற்காக முஸ்கான் மற்றும் அவரது காதலர் சாஹில் கைது செய்யப்பட்டனர். இருவரும் சௌரப்பை குத்திக் கொன்று, அவரது உடலை 15 துண்டுகளாக வெட்டி, குற்றத்தை மறைக்க ஒரு சிமென்ட் டிரம்மில் உடலை அடைத்து வைத்ததாக போலீசார் தெரிவித்தனர். அதோடு கொலை செய்த பிறகு குற்றவாளிகள் சிம்லா மற்றும் மணாலியில் உல்லாசமாக சுற்றி திரிந்ததும், சவுரப்பின் குடும்பத்தினருக்கு அவரது தொலைபேசியிலிருந்து குறுஞ்செய்திகளை அனுப்பி சவுரப் உயிரோடு இருப்பது போன்றும் நம்ப வைத்துள்ளனர். இதனிடையே, கடந்த 18ம் தேதி குற்றம் அம்பலமாகி இருவரும் கைது செய்யப்பட்டனர்.
உல்லாசமாக சுற்றி திரிந்த வீடியோ
கணவரை கொடூரமாக கொலை செய்த பிறகு முஸ்கான் ரஸ்தோகியும் அவரது காதலர் சாஹில் சுக்லாவும் மணாலியில் ஹோலியைக் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. வீடியோவில், முஸ்கானும் சாஹிலின் முகங்களில் வண்ணங்கள் நிரம்பி இருக்க, போதையில் இருந்த சாஹில் பல்வேறு சைகைகளையும் செய்துள்ளார்.
मेरठ : सौरभ राजपूत का कत्ल करने के बाद पत्नी मुस्कान रस्तौगी ने बॉयफ्रेंड साहिल शुक्ला के साथ होली खेली। Video देखिए... pic.twitter.com/586m3K3Sx3
— Sachin Gupta (@SachinGuptaUP) March 21, 2025
மற்றொரு காணொலியில், முஸ்கான் சாஹிலுக்கு கேக் ஊட்டி, அவருக்கு "பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று வாழ்த்து தெரிவித்து, முத்தமிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பனிக்கு மத்தியில் முஸ்கான் நடந்து செல்வது தொடர்பான புகைப்படங்களும் வைரலாகியுள்ளன.
pic.twitter.com/9uXjt8c9sk
— SatyavadiLadki (@SatyavadiLadki) March 21, 2025
Saurabh murder case: After the murder, Muskaan celebrated her lover Sahil Shukla's birthday in Manali!#HusbandMurder #JusticeForSaurabh #Meerut #SaurabhRajput #SahilShukla #MuskanRastogi #MeerutMurderCase
திருமணத்தை மீறிய உறவு
முஸ்கானும் சவுரப்பும் 2016 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துள்ளனர். சிறிது காலத்திலேயே முஸ்கானுக்கு சாஹிலுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு, அவர்களின் வீட்டு உரிமையாளர் முஸ்கானையும் சாஹில்லையும் "ஆட்சேபனைக்குரிய" நிலையில் பார்த்து சவுரப்பிடம்தெரிவித்துள்ளார். இதையடுத்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்த பிறகு, அவரது குடும்பத்தினர் சவுரப்பை தனது மனைவியுடன் சேர்ந்து வாழ சமாதானப்படுத்தியுள்ளனர்
2023 முதல் லண்டனில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்த சவுரப், கடந்த பிப்ரவரி 24 அன்று தனது மகளின் ஆறாவது பிறந்தநாளைக் கொண்டாட மீரட்டுக்குத் திரும்பினார . இதனிடையே, முஸ்கான் பல மாதங்களாகவே தனது கொலையைத் திட்டமிட்டு வந்துள்ளார். இதற்காக இரண்டு கத்திகளை வாங்கியிருந்தார், மேலும் ஒரு மருத்துவரைச் சந்தித்து, அவரை மயக்கமடையச் செய்வதற்குத் தேவையான மாத்திரைகளையும் பெற்றுள்ளார்.
குற்றவாளிகள் சிக்கியது எப்படி?
கடந்த 3ம் தேதி மாத்திரைகளை கொடுத்து சவுரப்பை மயக்கமடைய செய்த பிறகு கத்தியை கொண்டு, முஸ்கான் மற்றும் சாஹில் சரமாரியாக குத்தி கொன்றுள்ளனர். தொடர்ந்து உடலை துண்டுதுண்டுகளாக வெட்டி ட்ரம்மில் அடைத்துள்ளனர். அதைதொடர்ந்து உல்லாசமாக சுற்றி திரிந்து வீடியோக்களையும் பதிவு செய்துள்ளனர். அந்த சுற்றுலா முடிவடைந்தது வீடு திரும்பிய பிறகு, "போதைப்பொருள் உட்கொள்வதை நிறுத்துவார்" என்று நினைத்ததால் தானும் சாஹிலும் சேர்ந்து சவுரப்பை கொன்றதாக முஸ்கான் தனது தாயிடம் கூறி கதறியுள்ளார். அதன் அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, சவுரப்பின் உடல் கைப்பற்றப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

