மேலும் அறிய

TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு

TVK Vijay Speech: முதலமைச்சர் ஸ்டாலினை மன்னராட்சி முதல்வர் என, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சாடியுள்ளார்.

TVK Vijay Speech: ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழ வேண்டும் என்பது தான் நமது அரசியல் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் அரசை சாடிய விஜய்:

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய், “மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே, மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் போதாது அவர்களே, செயலில் அதை காட்ட வேண்டும் அவர்களே. ஒன்றிய பாஜக ஆட்சியையே பாசிச ஆட்சி என அறைகூவல் விடுத்துவிட்டு இங்க நீங்கள் செய்வது மட்டும் என்னவாம். அதற்கு கொஞ்சம் கூட குறைவில்லாத ஆட்சி தானே நடைபெறுகிறது” என விஜய் பேசினார்.

”தவெகவிற்கு நெருக்கடி”

தொடர்ந்து பேசுகையில், “ஒரு கட்சியின் தலைவராக ஜனநாயக முறைப்படி என கழக தோழர்களையும், எந்நாட்டு மக்களையோ சந்திக்க தடைபோட நீங்கள் யார்? தடையை மீறி மக்களை பார்க்க வேண்டும் என முடிவு பண்ணிட்டால் நான் போயே தீருவேன். சட்டத்தை மதிக்க வேண்டும் என்றே ஒரு காரணத்திற்காக தான் அமைதியாக இருக்கிறேன். நேற்று வந்தவர்கள் எல்லாம் முதலமைச்சராக கனவு காண்கிறார்கள் என பேசுகிறீர்கள். அது நடக்கவே நடக்காது என்றும் சொல்கிறீர்கள். பின்பு ஏன் எந்த கட்சிக்கும் கொடுக்காத நெருக்கடியை தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும் கொடுத்து கொண்டே இருக்கிறீர்கள். அணை போட்டு ஆற்றை வேண்டுமானல் தடுக்கலாம். காற்றை தடுக்க முடியாது. அதையும் மீறி தடுக்க நினைத்தால், சாதாரணமான  காற்று சூறாவளியாக மாறும். ஏன் சக்தி மிக்க புயலாகக் கூட மாறும்.”

சட்ட - ஒழுங்கு எங்கே?

தமிழக மண் பிளவுவாத சக்திகளுக்கு எதிரான மண். சகோதரத்துவம் மண், சமய நல்லிணக்கத்தை பேணும் சமூக நீதிக்கான மண். இதை நாம் பாதுகாத்தே ஆக வேண்டும். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வரும் செய்திகள், மன உளைச்சலையும், மன வேதனையையும் தரும்படியாகவே உள்ளன. சட்ட ஒழுங்கு என ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. இதற்கு எல்லாம் இந்த ஊழல்வாதிகள் கபடதாரிகளின் அரசு தான் காரணம்.  இந்த நிலை மாறனும். அதற்கு ஒரே வழி உண்மையான மக்களாட்சி வரவேண்டும். அது வரவேண்டுமானால் அவர்களை (திமுக) மாற்ற வேண்டும்.

மக்களின் நம்பிக்கை

அதற்கு நமது தோழர்கள் தினமும் மக்களை சந்திக்க வேண்டும். தினசரி ஒவ்வொரு சாலைக்கும், வீட்டிற்கும் சென்று அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்து தீர்வுகளை  கண்டறிந்து செயல்படுத்துங்கள். அப்போது தான் மக்களிடையே நம் மீது நம்பிக்கை வரவேண்டும். அப்படி ஒரு ஆழமான நம்பிக்கையை விதைத்து விட்டு நிமிர்ந்து பாருங்கள். ஒவ்வொரு வீட்டின் உச்சியிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் இரட்டைப் போர் யானை வாகை மலர் கொடி தானாக பறக்கும் ” என தவெக தலைவர் விஜய் ஆவேசமாக பேசினார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
MDMK Vaiko Sathya: நன்றி கெட்ட வைகோ? ”அப்ப இனிச்சது, இப்ப கசக்குதோ” நம்பிக்கை இல்லாத போர் வாள்?
MDMK Vaiko Sathya: நன்றி கெட்ட வைகோ? ”அப்ப இனிச்சது, இப்ப கசக்குதோ” நம்பிக்கை இல்லாத போர் வாள்?
ஹாப்பி! இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. தேதியை குறிச்சுக்கோங்க மக்களே
ஹாப்பி! இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. தேதியை குறிச்சுக்கோங்க மக்களே
ஸ்டாலின், உதயநிதியிடம் முறையிட்டும் பயனில்லை.. 7 வருஷம் போலீஸ் வேலைக்கு போராடும் திருநங்கை
ஸ்டாலின், உதயநிதியிடம் முறையிட்டும் பயனில்லை.. 7 வருஷம் போலீஸ் வேலைக்கு போராடும் திருநங்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?
Sivagangai Ajith Attack Video | அடித்தே கொன்ற POLICE! நடுங்க வைக்கும் பகீர் காட்சி வெளியான வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
MDMK Vaiko Sathya: நன்றி கெட்ட வைகோ? ”அப்ப இனிச்சது, இப்ப கசக்குதோ” நம்பிக்கை இல்லாத போர் வாள்?
MDMK Vaiko Sathya: நன்றி கெட்ட வைகோ? ”அப்ப இனிச்சது, இப்ப கசக்குதோ” நம்பிக்கை இல்லாத போர் வாள்?
ஹாப்பி! இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. தேதியை குறிச்சுக்கோங்க மக்களே
ஹாப்பி! இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. தேதியை குறிச்சுக்கோங்க மக்களே
ஸ்டாலின், உதயநிதியிடம் முறையிட்டும் பயனில்லை.. 7 வருஷம் போலீஸ் வேலைக்கு போராடும் திருநங்கை
ஸ்டாலின், உதயநிதியிடம் முறையிட்டும் பயனில்லை.. 7 வருஷம் போலீஸ் வேலைக்கு போராடும் திருநங்கை
Tamilnadu Roundup: வீட்டிற்கே வரும் ரேஷன் பொருட்கள்.. தமிழகத்தில் கொளுத்தப்போகும் வெயில் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: வீட்டிற்கே வரும் ரேஷன் பொருட்கள்.. தமிழகத்தில் கொளுத்தப்போகும் வெயில் - தமிழகத்தில் இதுவரை
Superman Review: சூப்பர் மேனை காப்பாற்றினாரா ஜேம்ஸ் கன்? டிசி யுனிவெர்ஸ் தப்பி பிழைக்குமா? ட்விட்டர் விமர்சனம்
Superman Review: சூப்பர் மேனை காப்பாற்றினாரா ஜேம்ஸ் கன்? டிசி யுனிவெர்ஸ் தப்பி பிழைக்குமா? ட்விட்டர் விமர்சனம்
Maruti Suzuki Cars: எவனாலயும் முடியாது..! அடிமாட்டு விலைக்கு 3 கார்கள், சிம்பிளா 34 கிமீ மைலேஜ் - சிட்டிக்கு இதுதான் பெஸ்ட்
Maruti Suzuki Cars: எவனாலயும் முடியாது..! அடிமாட்டு விலைக்கு 3 கார்கள், சிம்பிளா 34 கிமீ மைலேஜ் - சிட்டிக்கு இதுதான் பெஸ்ட்
IND Vs ENG Lords Test: ”போர் அடிக்குது, பேஸ்பால் கிரிக்கெட் எங்க?” - சொந்த மண்ணிலேயே இங்கி., கலாய்த்த இந்திய கேப்டன்
IND Vs ENG Lords Test: ”போர் அடிக்குது, பேஸ்பால் கிரிக்கெட் எங்க?” - சொந்த மண்ணிலேயே இங்கி., கலாய்த்த இந்திய கேப்டன்
Embed widget