ஏழைகளின் ஆப்பிள் எனப்படும், தக்காளியின் பிறப்பிடம், அயர்லாந்து.
வைட்டமின் ஏ, புரதம், கொழுப்பு சத்து, கால்சியம், இரும்புச்சத்து, சல்பர், பாஸ்பரஸ், வைட்டமின் பி12, பி3, சி, டி மற்றும் மாவுச்சத்தும் கொண்டது.
'இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்படும் தக்காளிகளில், 'பிளாவனாயிட்ஸ்' என்ற வேதிப்பொருள் அதிகளவில் உள்ளது.
அந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், இதயநோயை குறைப்பதிலும், சில வகை புற்றுநோய்க்கு எதிராகவும் இயங்கும் ஆற்றல் பெற்றவை
தக்காளி ஜூஸ் குடித்தால், நம் தினசரி கால்சியம் தேவையில், 40 சதவீதம் கிடைக்கும்.
தக்காளி பழத்தில் உள்ள, 'லைகோபின்' என்ற வேதிப்பொருள், பக்கவாதம் வராமல் தடுக்கிறது. இந்த வேதிப்பொருள், ரத்தத்தை சுத்திகரிக்கும்.
குளிக்கும் நீரில் தக்காளி சாறு கலந்து குளித்தால்,வியர்வை நாற்றம் போகும்.
தக்காளி சாறுடன், தேன் கலந்து சாப்பிட, தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும். தக்காளியில் உள்ள அமிலத்தன்மை, குடலில் வாயுவை உற்பத்தி செய்ய விடாமல் தடுக்கும்.
சுவாசக் கோளாறுகள் மற்றும் உடலில் உள்ள ஊளைச் சதையை குறைக்கும்.