மேலும் அறிய

Crime: திருவண்ணாமலையில் ஒரே இரவில் 4 ஏடிஎம் மையங்களில் கொள்ளை...வெளியான பகீர் சிசிடிவி காட்சிகள்..!

சமீப காலமாகவே, கொள்ளை சம்பவங்கள் அதிகம் நடந்து வருகிறது. இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை பகுதியில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் பணத்தை கொள்ளை அடித்த சம்பவத்தை தொடர்ந்து அதன் அண்டை மாவட்டமான வேலூர் மாவட்டத்தில் தமிழக ஆந்திர எல்லைகளான கிறிஸ்டியான்பேட்டை, பத்தளப்பள்ளி, சைனகுண்டா உள்ளிட்ட 6 மாநில எல்லைகளில் காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வழியாக செல்லும் ஆந்திர பதிவின் கொண்ட வாகனம் மட்டுமின்றி அனைத்து வாகனங்களையும், இருசக்கர வாகனம் லாரி பேருந்து கார் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

வேலூர் மாநகருக்கு உட்பட்ட தங்கும் விடுதிகளிலும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.  இன்று அதிகாலை 3:30 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில், கொள்ளையர்களின் வாகனம் தென்பட்டதாகவும், அது ஆந்திர பதிவின் கொண்ட வாகனமாக இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அதற்குப் பிறகு அந்த வாகனத்தின் வழித்தடம் தெரியாத நிலையில் அண்டை மாவட்டமான வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல் முழுவதும் உள்ள 28 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

கொல்லையில் ஈடுபட்டவர்களின் வாகனம் ஆந்திர பதிவின் கொண்ட வாகனம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தமிழக ஆந்திர எல்லையை கொண்ட வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஏடிஎமில் முதல் கொள்ளை நடந்துள்ளது. பின்னர், குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் தெரு ஸ்டேட் பேங்க் ஏடிஎம் கொள்ளை போனது.

பின்னர், ஆந்திரா தப்பி செல்லும் வழியில் கலசப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் இயந்திரம் மற்றும் போளூர் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் அமைந்துள்ள ஸ்டேட் பேங்க் ஏடிஎம் மையத்தில் கொள்ளை அடித்துள்ளனர்.

இதையத்து, கண்ணமங்கலம் வழியாக ஆந்திரா மாநிலத்திற்கு தப்பி சென்று இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

கொள்ளையில் ஈடுபட்டது ஆந்திரா மாநில கொள்ளையர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறுகின்றனர்.

ஏடிஎம்  அருகே உள்ள சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை அழிப்பதற்காகவே வெல்டிங் இயந்திரத்தில் ஏடிஎம் மிஷினை உடைத்து பணத்தை எடுத்துக் கொண்ட கொள்ளையர்கள் 4 ஏடிஎம் மையத்தையும் ஆதாரங்களை அழிக்கும் நோக்கோடு வெல்டிங் நெருப்பைக் கொண்டு தீயிட்டு கொளுத்தி உள்ளனர்.

குறிப்பாக சிசிடிவி காட்சிகள் பதிவாகவும் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை தீயிட்டு கொளுத்தி அழித்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா திருவண்ணாமலை எல்லையில் உள்ள சுங்கச்சாவடி மையத்தில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்.

நள்ளிரவில் நான்கு ஏடிஎம் மையங்களை குறிப்பாக ஸ்டேட் பேங்க் ஏடிஎம்-ஐ குறி வைத்து கொள்ளையடித்த சம்பவம் எதிரொலியாக வேலூர் சரக டிஐஜி முத்துசாமி திருவண்ணாமலைக்கு வருகை தந்து காவல்துறை உயர் அதிகாரி உடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் ஆந்திரா மாநிலத்திற்கு எஸ்பி தலைமையில் ஒரு தனிப்பட்டையும் , தெலங்கனா மாநிலத்திற்கு ஒரு தனிப்பட்டையினர் , கர்நாடக மாநிலத்திற்கு ஒரு தனிப்படை என 3 எஸ்பி தலைமையில் மூன்று மாநிலத்திற்கு விசாரணைக்கு சென்றுள்ளனர்.

காவல்துறை நடத்திய விசாரணையில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஏடிஎம் கொள்ளை சம்பவம் அரங்கேறி இருக்கலாம் என்றும் திருவண்ணாமலை நகரில் சிசி டிவி கேமராவில் ஆந்திர பதிவின் கொண்ட டாடா சுமோ வாகனத்தில் கொள்ளையர்கள்  வந்துள்ளது தெரியவந்தது.

ஆந்திரா பதிவேடு கொண்ட டாட்டா சுமோ கார்  தான் இவர்கள் பயன்படுத்தியது என்ற முதல் கட்ட தகவலும் வெளியாகி உள்ளது.

சமீப காலமாகவே, கொள்ளை சம்பவங்கள் அதிகம் நடந்து வருகிறது. இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வங்கியில் நடக்கும் கொள்ளை சம்பவங்கள் தொடர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget