மேலும் அறிய

மகளிருக்கு கொடுக்கப்படும் கடன் அதிகரிப்பு.. தனிநபர் வருமானம் உயர்வு.. பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

2023-24ம் ஆண்டில், தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் 3.15 ரூபாயாக லட்சமாக உள்ளது. மாநிலத்தின் தனிநபர் வருமானம் தேசிய சராசரியை விட கணிசமாக அதிகமாக உள்ளது என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வர்த்தக கடன் அதிகம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக பெண்களுக்கு அதிக கடன் கொடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் தேசிய சராசரியை விட கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தனிநபர் வருமானம் உயர்வு:

தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், 2024-25ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், பல முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்தியப் பொருளாதாரம் 2022-23-ல் 7.61%, 2023-24-ல் 9.19%, 2024-25-ல் 6.48% வளர்ச்சியை எட்டியது. தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் 2021-22-லிருந்தே 8% அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதத்தைத் தொடர்ந்து எட்டிவருவதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2024-25-லும் 8% அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு, 2023-24-ம் ஆண்டில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 9.21% பங்களித்துள்ளது.

தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

2023-24-ல் மாநில உள்நாட்டு உற்பத்தியானது (ஜிஎஸ்டிபி) நடப்பு விலையில் ரூ.27.22 லட்சம் கோடியை எட்டியுள்ளது. பெயரளவு வளர்ச்சி விகிதம் 13.71% ஆகவும், உண்மையான வளர்ச்சி விகிதம் 8.33% ஆகவும் உள்ளது. அந்நிய நேரடி முதலீடு ரூ.5,909 கோடியிலிருந்து ரூ.20,157 கோடியாக அதிகரித்துள்ளது.

2021-22 மற்றும் 2023-24க்கு இடையில், உற்பத்தித் துறை 8.33% ஆகவும், கட்டுமானத் துறை 9.03% ஆகவும் வளர்ச்சியடைந்ததாக தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 31.8% உள்ள வடக்கு மண்டலம், GSDP-யில் 36.6% என்ற அதிகபட்ச பங்களிப்பை வழங்குகிறது.  

22.8% மக்கள்தொகை கொண்ட மேற்கு மண்டலம் GSDP-யில் 29.6% பங்களிப்பை வழங்குகிறது. 20.5% மக்கள்தொகை பங்கைக் கொண்டுள்ளது தெற்கு மண்டலம் GSDP க்கு 18.8% பங்களிக்கிறது. கிழக்கு மண்டலம், 25.5% மக்கள்தொகையுடன், 15.1% இல் மிகக் குறைந்த GSDP பங்கைக் கொண்டுள்ளது.

2021-22 மற்றும் 2023-24 க்கு இடையில் உற்பத்தித் துறை 8.33% வளர்ச்சி அடைந்துள்ளது கட்டுமானத் துறை 9.03% வளர்ச்சி அடைந்துள்ளது. போக்குவரத்து உபகரணங்கள், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், மோட்டார் வாகனங்கள், ரசாயனங்கள் உள்ளிட்ட பல துணைத் துறைகள் இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்றுள்ளது. 

2023-24ம் ஆண்டில், தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ₹3.15 லட்சமாக உள்ளது. மாநிலத்தின் தனிநபர் வருமானம் தேசிய சராசரியை விட கணிசமாக அதிகமாக உள்ளது. 

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் தனிநபர் வருமானத்தில் முன்னணியில் உள்ளன. அதே நேரத்தில் சில தெற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்கள் மாநில சராசரியை விட குறைவாகவே உள்ளன. 

இலக்கு வைக்கப்பட்ட தொழில்துறை முதலீடுகள், டிஜிட்டல் உள்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் கிராமப்புற தொழில்முனைவோர் மேம்பாடு மூலம் சமநிலையான பிராந்திய வளர்ச்சியை உறுதி செய்வது அனைத்து மாவட்டங்களிலும் தனிநபர் வருமானத்தை உயர்த்துவதற்கு மிக முக்கியமானதாக இருக்கும் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பயமுறுத்தும் பதவி பறிப்பு மசோதா.. எந்த முதலமைச்சர் மீது அதிக வழக்கு? மு.க.ஸ்டாலின் மீது எத்தனை?
பயமுறுத்தும் பதவி பறிப்பு மசோதா.. எந்த முதலமைச்சர் மீது அதிக வழக்கு? மு.க.ஸ்டாலின் மீது எத்தனை?
CTSE: அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு பொன்னான வாய்ப்பு; மாதாமாதம் உதவித்தொகை; விண்ணப்பிப்பது எப்படி?
CTSE: அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு பொன்னான வாய்ப்பு; மாதாமாதம் உதவித்தொகை; விண்ணப்பிப்பது எப்படி?
லக்கா? பிசினஸ் ட்ரிக்கா? ரூ.334 கோடியை அள்ளிய பெண் - யார் என்று தெரிகிறதா? சட்டம் கொடுத்த ஷாக்
லக்கா? பிசினஸ் ட்ரிக்கா? ரூ.334 கோடியை அள்ளிய பெண் - யார் என்று தெரிகிறதா? சட்டம் கொடுத்த ஷாக்
அரசுப்பள்ளிகளில் அன்றாட பராமரிப்பு பணி; ரோட்டரியுடன் கைகோத்த பள்ளிக் கல்வித்துறை! எப்படி?
அரசுப்பள்ளிகளில் அன்றாட பராமரிப்பு பணி; ரோட்டரியுடன் கைகோத்த பள்ளிக் கல்வித்துறை! எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue
சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம் வெச்சு செய்யும் எதிர்க்கட்சிகள் பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR? | Congress | Rahul Gandhi vs ECI

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயமுறுத்தும் பதவி பறிப்பு மசோதா.. எந்த முதலமைச்சர் மீது அதிக வழக்கு? மு.க.ஸ்டாலின் மீது எத்தனை?
பயமுறுத்தும் பதவி பறிப்பு மசோதா.. எந்த முதலமைச்சர் மீது அதிக வழக்கு? மு.க.ஸ்டாலின் மீது எத்தனை?
CTSE: அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு பொன்னான வாய்ப்பு; மாதாமாதம் உதவித்தொகை; விண்ணப்பிப்பது எப்படி?
CTSE: அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு பொன்னான வாய்ப்பு; மாதாமாதம் உதவித்தொகை; விண்ணப்பிப்பது எப்படி?
லக்கா? பிசினஸ் ட்ரிக்கா? ரூ.334 கோடியை அள்ளிய பெண் - யார் என்று தெரிகிறதா? சட்டம் கொடுத்த ஷாக்
லக்கா? பிசினஸ் ட்ரிக்கா? ரூ.334 கோடியை அள்ளிய பெண் - யார் என்று தெரிகிறதா? சட்டம் கொடுத்த ஷாக்
அரசுப்பள்ளிகளில் அன்றாட பராமரிப்பு பணி; ரோட்டரியுடன் கைகோத்த பள்ளிக் கல்வித்துறை! எப்படி?
அரசுப்பள்ளிகளில் அன்றாட பராமரிப்பு பணி; ரோட்டரியுடன் கைகோத்த பள்ளிக் கல்வித்துறை! எப்படி?
சாதித்த ஸ்டாலின்: பள்ளிக் கல்விக்கு புதிய பாதை! இல்லம் தேடிக் கல்வி முதல் வெளிநாட்டு சுற்றுலா வரை - முழு விவரம்!
சாதித்த ஸ்டாலின்: பள்ளிக் கல்விக்கு புதிய பாதை! இல்லம் தேடிக் கல்வி முதல் வெளிநாட்டு சுற்றுலா வரை - முழு விவரம்!
Pujara Retired: ஓய்வு பெற்ற சகாப்தம்.. கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் புஜாரா - ரசிகர்கள் வேதனை
Pujara Retired: ஓய்வு பெற்ற சகாப்தம்.. கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் புஜாரா - ரசிகர்கள் வேதனை
சபரிமலை ஐயப்பன் மாநாடு 2025: கேரள அரசின் அழைப்பும், பாஜகவின் கடும் எதிர்ப்பும்! தேர்தல் அரசியலா ஆன்மீகமா?
சபரிமலை ஐயப்பன் மாநாடு 2025: கேரள அரசின் அழைப்பும், பாஜகவின் கடும் எதிர்ப்பும்! தேர்தல் அரசியலா ஆன்மீகமா?
கொச்சி-லட்சத்தீவு கடல் விமான சேவை: பயண நேரம் குறையும்! குறைந்த விலையில் பயணம்! புதிய அப்டேட்!
கொச்சி-லட்சத்தீவு கடல் விமான சேவை: பயண நேரம் குறையும்! குறைந்த விலையில் பயணம்! புதிய அப்டேட்!
Embed widget