ஜனநாயகன் படத்தில் தளபதி கச்சேரி.. எம்ஜிஆர் பாட்டுக்கு விஜய் நடனம்.. வெறித்தனமான ஆட்டம்
நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தில் பல சர்ப்ரைஸ் காட்சிகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சியை தொடங்கிய பிறகு முழு நீள அரசியல்வாதியாக மாறிவிட்டார். வரும் 2026 தேர்தலுக்கு பிறகு படங்களில் நடிக்க போவதில்லை என்றும் ஏற்கனவே விழுப்புரத்தில் நடந்த மாநாட்டில் தெரிவித்திருந்தார். இதனால், விஜய் நடித்து வரும் ஜனநாயகன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜனநாயகன் விஜய்யின் கடைசி படம் என கூறப்படுகிறது. இதனால், இதில் பல சர்ப்ரைஸான காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றனவாம்.
விஜய் நான்ஸ்டாப் நடனம்
ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரியாமணி, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் நடந்த மதராஸி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜனநாயகன் படம் குறித்து அனிருத் சிலாகித்து பேசியிருந்தார். அவர் கூறியது போலவே விஜய் தனது ரசிகர்களுக்காக நடனம் ஆடியிருப்பதாகவும், படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களே இதை பார்த்து மெய்சிலிர்த்து போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை அப்படி ஒரு டிரான்ஸ்பார்மேஷனை பார்த்தது இல்லை என படக்குழுவினரே விஜய்யை பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள். அப்போ கண்டிப்பா சர்ப்ரைஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.
ஜனநாயகன் படத்தில் தளபதி கச்சேரி
மேலும், ஜனநாயகன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 தேர்தல் நேரத்தில் இப்படம் வெளியாகும் என்பதால் தளபதி கச்சேரி என அப்பாடலுக்கு பெயர் வைத்துளளனராம். பாட்டு முழுக்க தளபதி கச்சேரி, தளபதி கச்சேரி என்ற வரிகளோடு இப்பாடல் பட்டி தொட்டியெங்கும் கலக்க இருக்கிறது. ரசிகர்களை கனெக்ட் செய்யும் பாடலாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஜனநாயகன் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதில் எங்கள் வீட்டு பிள்ளை எம்ஜிஆர் ஸ்டைலில் விஜய்யின் போஸ்டரும் இடம்பெற்றிருந்தது.
எம்ஜிஆர் பாடல் ரீமிக்ஸ்
எனவே எம்ஜிஆர் பாடல்களில் ஆல்டைம் ரெக்கார்டு படைத்த நான் ஆணையிட்டால் பாடலை ரீமிக்ஸ் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்பாடல் விஜய்யின் அரசியல் பிரேவசத்திற்கு பயன்படுத்தும் வகையிலும் இடம்பெற இருக்கிறதாம். நான் ஆணையிட்டால் பாடல் வந்தால் ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





















