மேலும் அறிய

GATE Exam 2025: தொடங்கிய பொறியியல் கேட் தேர்வு விண்ணப்பப் பதிவு; முக்கிய நாட்கள், கட்டணம், பாடத்திட்டம்!!

கேட் தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வாக (CBT) நடத்தப்படும். மூன்று மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வில், பொறியியல் மற்றும் அறிவியல் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்

அகில இந்திய அளவில் முதுகலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வான GATE- (Graduate Aptitude Test in Engineering) க்கான விண்ணப்பப் பதிவு இன்று (ஆக.28) தொடங்கி உள்ளது.

இந்த கேட் தேர்வு, இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (IITs) மற்றும் பிற முன்னணி பொறியியல் கல்வி நிறுவனங்களில் முதுகலை பொறியியல்  படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு ஆகும்.

முக்கிய நாட்கள் மற்றும் விவரங்கள்

  • விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள்: ஆகஸ்ட் 28, 2025
  • விண்ணப்பப் பதிவு முடியும் நாள்: செப்டம்பர் 28, 2025
  • தாமதக் கட்டணத்துடன் விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 9, 2025
  • தேர்வு நடைபெறும் நாட்கள்: பிப்ரவரி மாதம், 2026
  • தேர்வு முடிவுகள்: மார்ச் 19ஆம் தேதி, 2026                                                                                                                           எனினும் இந்தத் தேதிகள் அனைத்திலும் மாற்றம் இருக்கலாம் என்று ஐஐடி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 விண்ணப்பக் கட்டணம்

பொதுப் பிரிவினருக்கு ரூ. 2,000 மற்றும் பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு ரூ. 1,000. இவர்களுக்கான தாமதக் கட்டணம் முறையே 2,500 ரூபாயாகவும் 1, 500 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம்

கேட் தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வாக (CBT) நடத்தப்படும். மூன்று மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வில், பொறியியல் மற்றும் அறிவியல் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். பொதுவாக, பொதுத் திறன் (General Aptitude) பிரிவில் 15% கேள்விகளும், மீதமுள்ள 85% கேள்விகள் தேர்வு செய்யப்பட்ட பாடப்பிரிவில் இருந்தும் வரும்.

இந்த ஆண்டு 30 பாடப் பிரிவுகளுக்கு தேர்வு நடைபெறுகிறது. மாணவர்கள் தங்களது விருப்பமான பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கலாம்.

யார் விண்ணப்பிக்கலாம்?

பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை அல்லது அறிவியல் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். தற்போது இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

எப்படி விண்ணப்பிப்பது?

  1. தேர்வர்கள் iitg.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
  2. முகப்புப் பக்கத்தில் இருக்கும் GATE 2026 பதிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  3. விண்ணப்பதாரர்கள் தங்களைப் பதிவு செய்ய வேண்டிய ஒரு புதிய பக்கம் திறக்கும்.
  4. முன்பதிவு முடிந்ததும், கணக்கில் உள்நுழையவும்.
  5. விண்ணப்பப் படிவத்தை நிரப்பி விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
  6. சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்து உறுதிப்படுத்தல் பக்கத்தைப் பதிவிறக்கவும்.
  7. மேலும் தேவைக்கு அதன் அச்சிடப்பட்ட நகலை வைத்துக் கொள்ளலாம்.

2026 கேட் தேர்வு குறித்த முழு விவரங்களை https://gate2026.iitg.ac.in/doc/IB/GATE2026-IB-v22082025-1300.pdf என்ற அறிவிக்கையில் பெறலாம்.

தொலைபேசி எண்:  +91 361 258 6500

இ மெயில் முகவரி: helpdesk.gate@iitg.ac.in

கூடுதல் விவரங்களுக்கு: gate2026.iitg.ac.in

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

வெளிநாடுகளில் படிக்க போறீங்களா.? மாணவர்களுக்கு ரூ.36 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி.?
வெளிநாடுகளில் படிக்க போறீங்களா.? மாணவர்களுக்கு ரூ.36 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி.?
2026–27 முதுகலை மாணவர் சேர்க்கை: காரைக்கால் அரசு கல்லூரி முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2026–27 முதுகலை மாணவர் சேர்க்கை: காரைக்கால் அரசு கல்லூரி முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
90% தசைச் சிதைவு, பெருமூளை வாதம்; அதனால் என்ன? ஆட்டோ ஓட்டுநர் மகனுக்கு சென்னை ஐஐடியில் இடம்!
90% தசைச் சிதைவு, பெருமூளை வாதம்; அதனால் என்ன? ஆட்டோ ஓட்டுநர் மகனுக்கு சென்னை ஐஐடியில் இடம்!
 
 "வெளிநாட்டுப் பட்டம்" என்ற போலி கௌரவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்திய மாணவர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kamarajar Death Controversy : ‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ கார் லைட் வெளிச்சத்தில் காமராசருக்கு இடம் தேடிய வரலாறு..!
‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ காமராஜர் இறந்தநாளில் நடந்தது இதுதான்..!
Nepal Flood: நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
GOLD AND SILVER RATE TODAY : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்த தங்கம் விலை - ஒரு சவரனுக்கே இவ்வளவா.!!
GOLD AND SILVER RATE TODAY : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்த தங்கம் விலை - ஒரு சவரனுக்கே இவ்வளவா.!!
TN Weather News: சென்னையில் தொடரும் மழை..! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடரும் மழை..! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Rohit Sharma: என்ன தான் வேண்டும் உங்களுக்கு? ரோகித் சர்மா ஓய்வு குறித்து BCCI பகிரங்க முடிவு - 2027 உலகக் கோப்பை?
என்ன தான் வேண்டும் உங்களுக்கு? ரோகித் சர்மா ஓய்வு குறித்து BCCI பகிரங்க முடிவு - 2027 உலகக் கோப்பை?
Isros GSLV-F17: நள்ளிரவில் சம்பவம் செய்த இஸ்ரோ..! திட்டமிட்ட இலக்கை அடைந்த EOS-05 - வேலை என்ன தெரியுமா?
நள்ளிரவில் சம்பவம் செய்த இஸ்ரோ..! திட்டமிட்ட இலக்கை அடைந்த EOS-05 - வேலை என்ன தெரியுமா?
Ration Shop : நாளை முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! யார் யாருக்கெல்லாம்.? தேதி அறிவித்த தமிழக அரசு
நாளை முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! யார் யாருக்கெல்லாம்.? தேதி அறிவித்த தமிழக அரசு
Volkswagen: 5 ஸ்டார் ரேட்டிங் காருக்கு ரூ.6 லட்சம் ஆஃபரை அள்ளிப்போட்ட ஃபோக்ஸ்வாகன் - மற்ற மாடல்களுக்கு எப்படி?
5 ஸ்டார் ரேட்டிங் காருக்கு ரூ.6 லட்சம் ஆஃபரை அள்ளிப்போட்ட ஃபோக்ஸ்வாகன் - மற்ற மாடல்களுக்கு எப்படி?
Embed widget