விஜய் அங்கிள்-னு சாென்னது தப்பில்லை.. மாமானு கூப்பிட்டிருந்தா அவ்ளோதான்.. பிரபல இயக்குநர் ஓபன் டாக்
விஜய் அங்கிள் என சொன்னது தவறு இல்லை என சினிமா பிரபலம் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் பாப்பரத்தியில் கடந்த 21ஆம் தேதி தவெக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டார் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என குறிப்பிட்டு பேசியது பேசுபொருளாகியுள்ளது. முதல்வர் ஸ்டாலினை அரசியல் ரீதியாக அநாகரிக பேச்சு என்றும் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். விஜய் பேசுவது முறையற்ற வார்த்தை என்றும் விவாதம் செய்து வருகிறார்கள்.
அண்ணா பல்கலை விவாகரம் தொடர்பாக கல்லூரி பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஓவ்வொரு நாளும் பெண் பிள்ளைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை விஜய் சுட்டிக்காட்டு பேசியிருந்தார். அப்படி இருக்கையில் உங்களை எப்படி அப்பா சொல்ல சொல்றிங்க. வாட் அங்கிள் வெரி ராங் அங்கிள் என விஜய் முதல்வர் ஸ்டாலினை விமர்சனம் செய்தார். இந்த ஒரு வார்த்தை தான் கடந்த ஒரு வாரமாக விஜய்யை அரசியல் தலைவர்களை கோபப்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தவெக மாநாட்டில் பவுன்சர்கள் தொண்டர் ஒருவரை தள்ளிவிட்டதும் சர்ச்சையாக மாறியுள்ளது.
பாதிக்கப்பட்ட தொண்டர் ஒருவர் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், விஜய் அங்கிள் என கூப்பிட்டதற்கு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், விஜய் அங்கிள் என கூப்பிட்டது எனக்கு தவறாக தெரியவில்லை. அவர் முதல்வரை நேரில் பார்த்தால் கூட நல்லா இருக்கீங்களா அங்கிள் என்று தான் கேட்பார். நான் ரெட் ஜெயன்டிற்கு 2 படம் பண்ணியிருக்கேன். அப்போது முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தார். வீட்டிற்கு போகும்போது ஸ்டாலின் அங்கிள் என்று தான் கூப்பிடுவேன்.
அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லாம் அவரோட ரசிகர்கள். அவர்களை கவர அப்படி பேசியிருப்பார். தமிழில் மாமா என்று கூப்பிட்டிருந்தால் தான் தவறானது. அதை பொதுவெளியில் கமர்ஷியல் செய்து பேசியுள்ளார். ஆனால், அந்த வார்த்தையை சிலர் தவறாக புரிந்துகொண்டு பேசி வருகிறார்கள்.





















