டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு; யாரெல்லாம் தேர்ச்சி? முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!
TNPSC Group 1 results 2025: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெற்றோரின் விவரங்களைக் காண்பது எப்படி என்று காணலாம்.
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி அன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வுகள் நடைபெற்றன. உதவி ஆட்சியர், உதவி காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 70 காலி இடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடைபெற்றது.
இதில் தேர்ச்சி பெறுவோர் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள முதன்மைத் தேர்வை எழுதத் தகுதியானவர்கள் ஆவர்.
தேர்வர்கள் https://tnpsc.gov.in/document/finalresult/04_2025_GR_I_PUB_LIST_28.08.2025.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளைக் காணலாம். இந்த விவரங்கள் எதுவும் தபாலில் அனுப்பப்படாது என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
முதன்மைத் தேர்வு எப்போது?
குரூப் 1 முதன்மைத் தேர்வு டிசம்பர் 1 முதல் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு, தேர்வர்கள் செப்டம்பர் 3 முதல் 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. முதன்மைத் தேர்வு சென்னையில் மட்டுமே நடைபெற உள்ளது.
விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?
முதன்மைத் தேர்வுக்கு 200 ரூபாய் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். எனினும் கட்டண விலக்கு கோரும் தேர்வர்கள், எந்த கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை.
முதன்மைத் தேர்வு எழுத, 1 இடத்துக்கு 20 நபர்கள் என்ற விகிதத்தில், ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இவர்கள் உடனடியாக தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/






















