IIT: அனைவருக்கும் ஐஐடி; இந்த ஆண்டு மட்டும் 28 அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை- மொத்தம் எத்தனை பேர் தெரியுமா?
அனைவருக்கும் ஐ.ஐ.டி திட்டத்தின் கீழ் நமது அரசுப் பள்ளி மாணவர்கள் 28 பேர் ஐஐடி சென்னையில் இணைந்துள்ளார்கள்.

தமிழகத்தில் அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின்கீழ் இந்த ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 28 பேர், ஐஐடி சென்னையில் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அதேபோல கடந்த 4 ஆண்டுகளில் 381 அரசுப் பள்ளி மாணவர்கள் ஐஐடி சென்னையின் இணையவழி படிப்புகளில் சேர்க்கை பெற்றுள்ளனர்.
இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறும்போது, ’’தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தும் திட்டங்களின் துணையோடு அரசுப் பள்ளி மாணவச் செல்வங்கள் கல்வியில் உயரங்களை எட்டிப்பிடித்து சாதனை படைக்கிறார்கள்.
28 பேர் ஐஐடி சென்னையில் சேர்க்கை
அவ்வகையில் அனைவருக்கும் ஐ.ஐ.டி திட்டத்தின் கீழ் நமது அரசுப் பள்ளி மாணவர்கள் 28 பேர் ஐஐடி சென்னையில் இணைந்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். மாணவச் செல்வங்களுக்கு அன்பு வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.
2 இணைய வழிப் படிப்புகள் அறிமுகம்
அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின்கீழ் ஐஐடி சென்னை, பிஎஸ் தரவு அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் ஆகிய இணையவழிப் படிப்புகளை 2022ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது. இதற்கென பிரத்யேக நுழைவுத் தேர்வை ஐஐடி நடத்துகிறது. அந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் இந்த 2 படிப்புகளை இணையவழியில் படித்துக் கொள்ளலாம்.
அதன் ஒரு பகுதியாக, "அனைவருக்கும் IIT" திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டின் அரசுப் பள்ளி மாணவர்கள் 28 பேர் புகழ்பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகமான ஐஐடி சென்னையில் இணைந்துள்ளனர்.
மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு
இந்தச் சாதனை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர்தரக் கல்வியை உறுதி செய்வதில் தமிழ்நாடு அரசு கொண்டுள்ள உறுதியை எடுத்துக்காட்டுகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம், சமூகத்தின் அனைத்துத் தரப்பு மாணவர்களும், குறிப்பாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தங்கள் கனவுகளைத் தேடி, தேசிய அளவிலான முதன்மைக் கல்வி நிறுவனங்களில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது.























