மேலும் அறிய

Tamil Nadu Cabinet Meeting: தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது - வெளிநாடு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவுகள் என்ன?

Tamil Nadu Cabinet Meeting: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அரசின் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Tamil Nadu Cabinet Meeting: தமிழ்நாடு அரசின் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில், பல்வேறு முக்கிய முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்:

தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்தபடி, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சரவை அறையில் காலை 11 மணியளவில் இந்த ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்படும் எனவும், அதைதொடர்ந்து அரசு சார்பில் முக்கிய முடிவுக வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?

கடந்த 7 மற்றும் 8ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் மேற்கொள்ளப்பட பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் ஈர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த முதலீடுகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி, வரும் 28ம் தேதி முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தொடங்க உள்ள சூழலில், இன்றைய அம்மைச்சரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் தமிழ்நாட்டில் இல்லாத சூழலில் சட்ட-ஒழுங்கை பாதுகாப்பது, பிரச்னைகளை கையாள்வது போன்ற பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. அதோடு, மக்கள் நலதிட்டங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும்போது சில தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு சார்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. அந்த நிறுவனங்கள் குறித்தும், அவர்களுக்கு தமிழகத்தில் தொழில் தொடங்க அனுமதி அளிப்பது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்:

ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் ஜனவரி மாதம் தமிழக சட்டப்பேரவை கூட்டம், ஆளுநர் உரையுடன் தொடங்கும். ஆனால் நடப்பாண்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு, பிரதமர் மோடி தமிழகம் வருகை மற்றும் முதலமைச்சரின் வெளிநாடு பயணம் ஆகிய காரணங்களால் சட்டப்பேரவை கூடுவது தாமதமாகி வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவை கூட்டம் மற்றும் ஆளுநர் உரை குறித்து முக்கிய விவாதம் நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம்:

வரும் 28ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் ஸ்டாலின்  ஸ்பெயின், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்கிறார். அந்த பயணத்தை முடித்துக் கொண்டு பிப்ரவரி முதல் வாரம் தான் அவர் சென்னை திரும்புகிறார். இந்த பயணத்தின் போது அவர் மருத்துவ சிகிச்சை பெற உள்ளதாகவும், சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், முதலமைச்சர் ஸ்டாலின் வருகைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற பிப்ரவரி மாதம் 2வது வாரம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
"அய்யோ மாட்டிக்கிட்டோமே" சோதனை செய்த போலீஸ்.. வசமாக சிக்கிய கடத்தல்காரர்.. கடைசியில் ட்விஸ்ட்
Sun TV: டிஆர்பி ரேட்டிங்கில் அதளபாதாளத்தில் கிடக்கும் சன் டிவி சீரியல்கள் இதுதான்!
Sun TV: டிஆர்பி ரேட்டிங்கில் அதளபாதாளத்தில் கிடக்கும் சன் டிவி சீரியல்கள் இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

வார்த்தையை விட்ட அண்ணாமலை! அதிருப்தியில் EPS! குழப்பத்தில் பாஜக சீனியர்கள்Rajendra Balaji Vs Mafoi Pandiarajan | மிரட்டிய ராஜேந்திர பாலாஜி!EPS-யிடம் போட்டு கொடுத்த மாஃபா தூதுவிடும் தவெக!Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
"அய்யோ மாட்டிக்கிட்டோமே" சோதனை செய்த போலீஸ்.. வசமாக சிக்கிய கடத்தல்காரர்.. கடைசியில் ட்விஸ்ட்
Sun TV: டிஆர்பி ரேட்டிங்கில் அதளபாதாளத்தில் கிடக்கும் சன் டிவி சீரியல்கள் இதுதான்!
Sun TV: டிஆர்பி ரேட்டிங்கில் அதளபாதாளத்தில் கிடக்கும் சன் டிவி சீரியல்கள் இதுதான்!
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
WhatsApp Admin Shot: அடப் பாவிங்களா.! வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து தூக்கியதால் அட்மின் சுட்டுக்கொலை.. எங்கு தெரியுமா.?
அடப் பாவிங்களா.! வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து தூக்கியதால் அட்மின் சுட்டுக்கொலை.. எங்கு தெரியுமா.?
BJP TN Leader Sarathkumar?: என்னது.!! நம்ம நாட்டாம பாஜக தலைவர் ஆகப்போறாரா.? அப்போ அண்ணாமலையோட கதி.?!
என்னது.!! நம்ம நாட்டாம பாஜக தலைவர் ஆகப்போறாரா.? அப்போ அண்ணாமலையோட கதி.?!
L Murugan:
L Murugan: "பெண்கள் சாலையில் நடக்க முடிவதில்லை" பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை -எல்.முருகன் ஆவேசம்.
Embed widget