மயிலாடுதுறைக்கு 8 புதிய திட்டங்கள் அறிவிப்பு! அதிமுக-வை விளாசிய முதல்வர் ஸ்டாலினின் முழு பேச்சு இதோ
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து இன்று மயிலாடுதுறை மாவட்டம் மன்னன்பந்தல் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், நிறைவுற்ற கட்டிடங்களை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து விழாவில் அவர் பேசியதாவது :
மாவட்டத்தின் மருமகன்
பல்வேறு சிறப்புகள் உடைய மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பது மட்டுமின்றி இந்த மாவட்டத்தின் மருமகன் என்கிற உரிமையோடு உங்களில் ஒருவனாக இன்று மட்டும் ரூ.48 கோடியே மதிப்பிலான திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், திட்ட பணிகளை திறந்து வைத்தும் 54 ஆயிரத்து 461 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளேன். இந்த அரசு விழாவை மிகச் சிறப்பாக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்துள்ள பொறுப்பு அமைச்சர் மெய்ய நாதனுக்கும், சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகனுக்கும் எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறப்பாக பணியாற்றிய அமைச்சர் - மாவட்ட செயலாளர்
நம் திராவிட மாடல் ஆட்சி அமைந்து மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உலக செஸ் வீரர்கள் அனைவரும் பாராட்டிய 44 செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பு பெற்றது என்று கூறினால், அதை மெய்யநாதனின் திறமைக்கு சான்று. புதுக்கோட்டை சொந்த மாவட்டமாக இருந்தாலும் பொறுப்பெடுத்துக் கொண்டு இந்த மயிலாடுதுறை மாவட்டத்தை சொந்த மாவட்டமாக நினைத்து உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரோடு சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகனும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
அன்பு மழையில் நனைந்த மக்கள்
நேற்று திருவெண்காட்டில் இருந்து மயிலாடுதுறை வருவதற்கு நான்கு மணி நேரம் ஆனது. வழி நெடுகிலும் கூட்டம், மயிலாடுதுறையில் நகரில் மக்களை நடந்து சந்தித்தபோது இடையில் மழை வந்தது. ஆனாலும் மழையினை பொருட்படுத்தாமல் மக்கள் என் மீது அன்பு மழை பொழிந்தது என்னை நெகிழ வைத்தது. அதேபோல் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அவர்களுக்கும் மற்றும் அரசு அலுவலர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முடைய திராவிட மாடல் அரசின் இலக்கு எல்லோருக்கும் எல்லாம் அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி, அதனால் தான் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் பார்த்து பார்த்து அனைவரின் கருத்துகளையும் கேட்டு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். கடந்த நான்கு ஆண்டு திராவிட மடல் ஆட்சியில் நமது மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் 7 ஆயிரத்து 420 கோடியில் வளர்ச்சி பணிகள் உட்பட ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மீனவர் பிரச்சினை
இலங்கை கடற் படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை நிரந்தர தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என நான் பிரதமரை சந்திக்கும் போதெல்லாம் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறேன். கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி சட்டமன்றத்தில் மீண்டும் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். அது மட்டுமல்ல இலங்கை சிறையில் வாடுகிற நம்முடைய மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மீட்க வேண்டும் என ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். தமிழர்கள் மீதோ தமிழக மீனவர்களின் மீதோ கொஞ்சமும் அக்கறை இலலாத ஒன்றிய பாஜக அரசு கச்சதீவை தாரை வாய்த்தது யார் என்று அவர்கள் அரசியல் மட்டும் தான் செய்து வருகிறார்கள். இன்னொரு நாட்டோடு ஒப்பந்தம் போடுவது என்பது ஒன்றிய அரசனுடைய அதிகாரத்தில் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேல் பாஜக தான் ஒன்றியத்தில் ஆட்சி செய்து வருகிறார்கள் இதுவரை கச்சைதீவை மீட்க அவர் எடுத்த நடவடிக்கை என்ன? குறைந்தபட்சம் தமிழ் நாட்டு மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதை ஆவது அவர்கள் தடுத்து உள்ளார்களா? இல்லை படகுகளை மீட்க முயற்சி செய்திருக்கிறார்களா? அதுவும் கிடையாது.

சமீபத்தில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் என்ன பேசி இருக்கிறார். கச்சத்தீவு என்பது கடல் பகுதியில் தமிழ்நாடு மீனவர்கள் அத்துமீறி நுழைகின்றனர். கச்சத்தீவை ஒருபோதும் விட்டு தர மாட்டோம் என்று இலங்கை வெளிவரவுத்துறை அமைச்சர் பேசியிருக்கிறார். இதற்கு வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் என்ன பதில் அளித்திருக்கிறார்? தயவு செய்து நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் இதுவரை இல்லை. என்னுடைய தொடர் கோரிக்கை பிரதமர் இதில் தலையிட்டு நேரடியாக தலையிட்டு இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நாம் தொடர்ந்து சொல்கிறோம். அதற்கு தமிழ்நாடு அரசும் திராவிட அரசும் தொடர்ந்து போராடும். இதை மீனவ சகோதரருக்கு நான் உறுதியோடு தெரிவிக்கிறேன்.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு புதிய திட்டங்கள்
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்து உங்களுக்கு தேவையானதை கேட்டுவிட்டு அறிவிப்புகளை செய்யாமல் நான் இருக்க முடியுமா? அப்படி செய்யாமல் நான் இங்கிருந்து போக முடியுமா? நீங்கள் விட்டாலும் நான் மனம் இன்றி போவேனா? முடியாது. அதனால் மாவட்டத்திற்கான 8 புதிய அறிவிப்புகளை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நான் அறிவிக்க விரும்புகிறேன்.
- மயிலாடுதுறை பகுதியில் சீரான வாகன போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் நீடூர் ஊராட்சியில் 85 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.
- பயணிகள் அதிகமாக பயன்படுத்துகின்ற தரங்கம்பாடி மங்கநல்லூர் ஆடுதுறை சாலை 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரு வழிச்சாலையாக மேம்படுத்தப்படும்.
- தென்னாப்பிரிக்காவில் நடந்த சத்தியாகிரக போராட்டத்தில் மகாத்மா காந்தி உடன் கலந்து கொண்டு உயிர்த்தியாகம் செய்த சுதந்திர போராட்ட தியாகி சாமி நாகப்பன் அவர்களின் நினைவாக அவரை போற்றும் வகையில் மயிலாடுதுறையில் அவருடைய திருவுருவ சிலை அரசால் நிறுவப்படும்.
- அறிவிப்பு குத்தாலம் நகரத்தில் பாயக்கூடிய குத்தாலம் வாய்க்கால் 7 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்படும்.
- தரங்கம்பாடி வட்டத்தில் இருக்கக்கூடிய தாழம்பேட்டை மற்றும் வெள்ளகோயில் கிராமங்களில் கடற்கரையோர கட்டமைப்பு வசதிகள் 8 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும்.
- சீர்காழி நகராட்சிக்கு ஐந்து கோடி ரூபாய் செலவில் புதிய நகராட்சி அலுவலகம் கட்டித் தரப்படும்.
- மீனவர்களுக்கு பொறுத்தவரையில் சீர்காழி வட்டம் திருமுல்லைவாசல் மீன் தளத்தில் மேற்கூரை நீட்டிப்பு மற்றும் தூர்வாரப்பணி மேற்கொள்ளுதல் குறித்து சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் மூலமாக ஆய்வு மேற்கொள்ள துறை அமைச்சருடைய அறிவிப்பின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வின் அடிப்படையில் இந்த மேம்பாட்டு பணிகள் நிச்சயம் மேற்கொள்ளப்படும்.
- சீர்காழி வட்டத்தில் உள்ள பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் நான்கு கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரப்படும்
- சீர்காழி நகராட்சியில் இருக்கக்கூடிய தேர் கீழ வீதி, மேலவீதி, தெற்கு வீதி மற்றும் வடக்கு வீதி ஆகிய இடங்களில் இருபுறமும் மழைநீர் வடிகால் உடன் கூடிய சாலை மேம்பாட்டு பணிகள் எட்டு கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
நேற்று சிதம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை தொடங்கி வைத்தேன். தமிழ்நாடு முழுவதும் நகரங்கள், கிராமங்கள் என அனைத்திலும் முகாம்கள் அமைத்து 46 சேவைகளை வழங்குகிறோம். தமிழ்நாட்டின் கடைக்கோடி மக்களுக்கும் அரசின் அனைத்து சேவைகளும், திட்டங்களும் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று வழங்குவது தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் நோக்கம். இதில் முக்கியமானது கலைஞர் மகளிர் உரிமை தொகை. இத்திட்டத்தில் தகுதியுள்ள சிலருக்கு கிடைக்கவில்லை என கோரிக்கைகள் தொடர்ந்து வந்தன. தகுதி உள்ள யாரும் இந்த திட்டத்தில் இருந்து விடுபட்டு விடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். இந்த திட்டத்தை அறிவித்தவுடன் எடப்பாடி பழனிச்சாமி பயந்து போய் திட்டத்தை பற்றி அவதூறாக பேசி வருகிறார். இந்த திட்டம் குறித்து அவரே தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி மொத்தத்தில் விமர்சனம் என்ற பெயரில் நமக்கு விளம்பரத்தை செய்து கொண்டிருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி. ஆனால் இந்த திட்டத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் வாய்க்கு வந்துபடி எல்லாம் பேசுகிறார். தேர்தலுக்கு முன்பே ஒரு ஊராகவோ சென்று ஒரு பெட்ஷீட் போட்டு உட்கார்ந்து மனு வாங்கினாரே ஸ்டாலின். அதெல்லாம் என்ன ஆச்சு என்று அதிமேதாவி போல் பேசுகிறார். பெட்ஷீட் போட்டு வாங்கிய மனுக்களை எக்ஸெல் சீட்டாக மாற்றி மனுக்களை ஒர்க் சீட் ஆக மாற்றி தீர்வு கண்டுள்ளோம். அது தெரியாமல் நாலு வருடமாக குடும்பத்துடன் ஸ்டாலின் இருந்ததாக சொல்லுகிறார்.
என் குடும்பத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டு மக்கள் தான். என்றும் நான் அவர்களுடன் தான் இருப்பேன். இருந்தேன். இருப்பேன். இருந்தே தீருவேன். அந்த எந்த மாற்றமும் இல்லை உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை பொறுத்தவரை வீடு வீடாக செல்கிறோம். அவருடைய கட்சியை சேர்ந்தவர்கள் குடும்பத்தினரிடம் விசாரித்து பார்க்கட்டும். பேதம் பார்க்காமல் தமிழ்நாட்டு மக்களை தன் குடும்பமாக நினைக்கிற ஆட்சி தான் இந்த ஸ்டாலினின் ஆட்சி. மகளிர் உரிமைத்தொகை உட்பட அனைத்து திட்டங்களும் அதிமுக குடும்பத்தை சேர்ந்த மகளிர்க்கும் சென்று சேருகிறது. அதிமுக ஆட்சி கடந்த பத்து வருஷமா தமிழ்நாட்டில் நிர்வாகத்தை சீர்குலைத்து சின்னா பின்னமாக ஆக்கி வைத்திருந்தார்கள். அதை சரி பண்ணி ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று அறிவித்தோம். திமுகவில் ஆயிரம் ரூபாய் தர முடியாது, அந்த ஆட்சி வந்தாலும் தர முடியாது என அப்பவும் சொன்னார். ஆட்சிக்கு வந்த பின்பும் சொன்னார். என அவதூரை பரப்பினார். நான் சொன்னேன் சொன்னதை செய்வோம், செய்வதை தான் சொல்வோம் நம் நெஞ்சில் வாழக்கூடிய கலைஞருடைய மகன் நான் அதை உறுதியாக செய்வேன் என சொன்னபடி செய்து கொடுத்தோம்.
மாதந்தோறும் மகளிர் உரிமை தொகை கரெக்டா அக்கவுண்ட்ல வந்து விழுந்து கிட்டு இருக்கு தேதி மாறாமல் நாள் தவறாமல் வந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல பேருந்தில் கட்டணம் இல்லாத விடியல் பயணம் மூலமாக மாதம் 800 ரூபாய்க்கு மேல் மகளிரால் சேமிக்க முடிகிறது என்று சொன்னோம். இந்த இரண்டு திட்டமும் பெண்களுடைய பொருளாதார சமூக விடுதலைக்கு அடித்தளமாக அமைந்திருக்கு. திராவிட மாடல் அரசினுடைய நான்காண்டு ஆட்சியில் இதுபோல பல திட்டங்களின் பயன்களை எல்லாம் என்னால் சொல்ல முடியும். பழனிசாமி அவருடைய நான்காண்டு ஆட்சியில் என்ன செய்தார்.
இதே மயிலாடுதுறையில் நாம் சிலை அமைத்திருக்கக்கூடிய மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரில் ஆன ஏழைப் பெண்கள் திருமண உதவி திட்டத்தை 2018 ஆம் ஆண்டு நிறுத்துனவர் தான் பழனிச்சாமி. மாணவர்களுக்கான லேப்டாப் திட்டத்தை நிறுத்துனவரும் அவர்தான், அவரு எனக்கு டாட்டா பாய் பாய் சொல்றாராம் மாண்புமிகு பத்து தோல்வி பழனிச்சாமி அவர்களே 2019 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக உங்களுக்கு டாட்டா பாய் பாய் சொல்லிட்டு தான் இருக்கிறார்கள் இந்த தேர்தலிலும் உங்களுக்கு நிரந்தரமாக குட்பை சொல்லிட்டு போறாங்க மக்கள் இனி ஒருபோதும் உங்களை நம்ப போவதில்லை, ஏன் உங்கள் கட்சி காரர்களை தேர்தல் களத்தில் உங்களை நம்ப தயாராக இல்லை. ஒரு காமெடியில் வரும் அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வர மாட்ட அந்த மாதிரி அவர்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள்.
இதை தெரிஞ்சுக்கிட்டு சுந்தரா ட்ராவல்ஸ் படம் போன்று, அந்த மாதிரி ஒரு பஸ் எடுத்துக்கிட்டு இப்ப கிளம்பிட்டாரு. அந்த பஸ்ஸிலிருந்து புகை வர்ற மாதிரி அவர் வாயில் இருந்து பொய்யும் அவதூறு வருது. மக்கள் உங்களை நம்ப தயாராக இல்லை. விரக்தியில் என்ன பேசுவது என்று தெரியாமல் தமிழ்நாட்டு மக்களான உங்கள் மேலே குற்றச்சாட்டு வைக்கிறார். உங்களை கொச்சைப்படுத்துகிறார். என்னன்னா ஆயிரம் ரூபாய்க்கு ஏமாத்திட்டீங்களே. ஆயிரம் ரூபாய்க்கு நீங்க ஏமாந்து போயிட்டீங்களே அது மாதிரி ஒவ்வொரு பிரச்சார கூட்டத்திலும் தாய்மார்களை பார்த்து பேசுகிறார். மக்கள் ஏமாறவில்லை பாஜகவை நம்பி நீங்கள்தான் ஏமாந்து போய் இருக்கிறீர்கள்.
உங்கள் சுயநலத்துக்காக உங்கள் குடும்பத்தினரை ரைடில் இருந்து காப்பாத்த அதிமுகவையே டெல்லியில் போய் அமித்ஷா கிட்ட அடமானம் வைத்து விட்டு வந்திருக்கிறீர்கள். மூணு காரு நாலு காரு மாறி அமித்ஷா வீட்டு கதவைத் தட்டினது பற்றி தம்பி உதயநிதி தான் முதலில் பேசினார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள். அமித்ஷாவின் வீட்டு கதவை தட்டினால் என்ன தப்பு அப்படியே வெட்கமில்லாமல் கேட்கிறீர்கள். யாருக்காக தட்டுனீங்க உங்கள் குடும்பத்துக்காக ரைடில் இருந்து காப்பாற்ற உங்க கட்சிக்காரர்களை அடமானம் வைக்க தான தட்டினீங்க. பாஜக கூட்டணியால தான் 2021 சட்டமன்ற நாங்கள் தோற்று போனோம் என்று நீங்களும் சொன்னிகள், உங்க கட்சிக்காரர்களும் வெளிப்படையாக சொன்ன பிறகும் அதே கட்சியோடு கூட்டணி வச்சி இருக்கிறீர்களே? அதற்குப் பெயர் தான் குடும்ப பாசமா? உங்கள் குடும்பத்தை காப்பாத்த கோடிக்கணக்கான தொண்டர்களைக் கொண்டு இருக்கக்கூடிய இந்த கட்சியை டெல்லியோட சதுரங்க வேட்டையில் சிக்கி அடமானம் வைத்து விட்டீர்கள். உங்கள் சொந்த கட்சிக்காரர்களே நம்பாத இந்த நிலையில் தமிழ்நாட்டு மக்கள் நம்பி ஏமாற தயாராக இல்லை. ஸ்டாலின் கையில் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கும் என மக்கள் வாக்களித்துள்ளனர் அடுத்து வருவதும் திராவிட மாடல் ஆட்சிதான் திராவிட மாடல் 2.0 தான். இவ்வாறு அவர் பேசினார்.





















