ஆளுநர் - தமிழக அரசு மோதல் போக்கு! உச்சநீதிமன்றம் சென்ற வழக்கு! நீதிபதிகள் சொன்ன கருத்து
ஆளுநர் – தமிழக அரசு இடையிலான மோதல் போக்கு மக்களுக்கே பாதிப்பு என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஆளுநர் – தமிழக அரசு இடையிலான மோதல் போக்கு மக்களுக்கே பாதிப்பு என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆளுநர் – தமிழக அரசு மோதலால் மாநிலமும் மக்களும்தான் பாதிக்கப்படுகிறார்கள் என கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மசோதாக்களுக்கு தேவையான ஒப்புதல்களை அளிக்குமாறு ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோத்தகி, தமிழக அரசு மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கிறது. ஆனால் ஆளுநர் அதை திருப்பி அனுப்புகிறார்.
உடன சட்டமன்றத்தில் மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. அதை கண்டிப்பாக ஆளுநர் ஏற்க வேண்டும். இது விதிமுறை. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி அதை செய்வதில்லை.
இதுவரை ஆளுநருக்கு 12 மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் இரண்டு மசோதாக்களை மட்டுமே ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். மீதமுள்ளவை நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டன” என வாதங்களை முன் வைத்தார்.
இதையடுத்து குறுக்கிட்ட நீதிபதிகள் நாளுநர் – தமிழக அரசு இடையிலான மோதல் போக்கால் மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள் என கருத்து தெரிவித்தனர். மேலும் ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மாநில அரசின் செயல்பாட்டுக்கு முட்டுக்கட்டையாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தமிழ்நாடு ஆளுநரை நீக்கக்கோரி வழக்கறிஞர் ஜெய்சுகின் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அரசியல் சாசனத்துக்கு எதிராக தமிழ்நாடு ஆளுநர் செயல்படுவதாக கூறி மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஏற்கெனவே இது தொடர்பாக வழக்குகள் விசாரணையில் உள்ளதை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

