பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தலையில் குல்லாவுடன் லுங்கி அணிந்து வந்துள்ளார் விஜய்.

தவெக சார்பில் நடைபெறுகிற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சிக்கு தலையில் குல்லாவுடன் லுங்கி அணிந்து வந்துள்ளார் விஜய். சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், 3000 இஸ்லாமியர்களுடன் இணைந்து விருந்து உண்ண உள்ளார் விஜய்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தவெகவினரும் விஜய் ரசிகர்களும் ஒய்எம்சிஏ மைதானத்தின் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்தனர். இதனால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அதை மீறி பலர் ஒய்எம்சிஏ மைதானத்தில் நுழைந்தனர்.
தவெக அரசியல்:
திமுக, அதிமுக கட்சிகளின் கோட்டையாக உள்ளது தமிழ்நாடு. தமிழகத்தை கைப்பற்ற பல அரசியல் கட்சிகள், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, நடிகர்கள் பலர், அரசியலில் குதித்து வெற்றி பெற முயற்சித்துள்ளனர்.
அதில், விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக குறிப்பிடத்தகுந்த வெற்றியை பதிவு செய்தது. திமுக, அதிமுகவுக்கு எதிராக மக்கள் மத்தியில் இருக்கும் அதிருப்தியை பயன்படுத்தி அரசியலில் தனக்கான இடத்தை உருவாக்கினார். ஆனால், அது நீண்ட காலம் நீடிக்கவில்லை. பல்வேறு காரணங்களால் அவரின் கட்சி, தற்போது தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறது.
லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த விஜய்:
இந்த நிலையில், விஜயகாந்தின் அதே பாதையில் பயணித்து வருகிறார் தவெகவின் விஜய். ஆளுங்கட்சியை எதிர்த்து தீவிரமாக செய்லபடுவதன் மூலம் வாக்குகளை பெற முடியும் என விஜய் நம்புகிறார். ஒரு படி மேலே சென்று, திமுகவின் பலமான வாக்குவங்கியாக கருதப்படும் இஸ்லாமியர்களை குறிவைத்து விஜய் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு தலையில் இஸ்லாமியர் அணியும் குல்லாவுடன் லுங்கி அணிந்து விஜய் கலந்து கொண்டார். இதில், 3000 இஸ்லாமியர்களுடன் இணைந்து விஜய் விருந்து உண்டார்.
இதையும் படிக்க: Chennai Madurai Expressway: அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...





















