"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
மத்திய பாஜக அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என ஒடிசா பாஜக அரசிடம் ஆதரவு கேட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதேபோல, கேரள, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களின் பாஜக தலைவர்களுக்கும் அவர் கடிதம் எழுதி இருக்கிறார்.

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 7 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால், மத்திய பாஜக அரசு கொண்டு வர உள்ள திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என ஒடிசா பாஜக அரசிடம் ஆதரவு கேட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதேபோல, கேரள, கர்நாடக, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் பாஜக தலைவர்களுக்கும் அவர் கடிதம் எழுதி இருக்கிறார்.
7 மாநில முதல்வர்களுக்கு பறந்த கடிதம்:
தொகுதி மறுசீரமைப்புக்கு தென் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டிற்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தென் மாநிலங்களின் தலைமைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டிருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக தமிழ்நாட்டில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான போராட்டங்களில் மற்ற மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 7 மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.
இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால், மத்திய பாஜக அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்படி ஒடிசா பாஜக அரசிடம் ஆதரவு கேட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதேபோல, கேரள, கர்நாடக, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் பாஜக தலைவர்களுக்கும் அவர் கடிதம் எழுதி இருக்கிறார்.
ஸ்டாலினின் ஸ்கெட்ச்:
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் கூட்டம் சென்னையில் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள பிரதிநிதிகளை அனுப்புமாறு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு திட்டம் கூட்டாட்சியின் மீதான அப்பட்டமான தாக்குதலாகும்.
மக்கள் தொகை கட்டுப்பாட்டையும் நல்லாட்சியையும் உறுதி செய்த மாநிலங்களின் நாடாளுமன்ற உரிமை குரலை நசுக்குவதன் மூலம் தண்டிக்க உள்ளார்கள். இந்த ஜனநாயக அநீதியை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த நியாயமற்ற நடவடிக்கைக்கு எதிராக சமரசமற்ற போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறோம். நமது மாநிலங்கள் அமைதியாக்கப்படுவதை எதிர்த்து நமது உரிமைகளை பாதுகாக்க ஒரு கூட்டு நடவடிக்கைக் குழுவை (JAC) உருவாக்குகிறோம்.
வரும் மார்ச் 22ஆம் தேதி, சென்னையில் முதல் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற உள்ளது. தனித்தனி அரசியல் அமைப்புகளாக அல்லாமல், மாறாக நமது மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பவர்களாக ஒன்றிணைவோம்" என குறிப்பிட்டுள்ளார்.





















