இலங்கையில் வெடிக்கும் வன்முறை; தப்பிக்கும் சிறைக் கைதிகள் - இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய உளவுத்துறை
இலங்கையில் இருந்து கடல்மார்க்கமாக அந்நாட்டு மக்கள் இந்தியாவிற்குள் நுழைய வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக அந்த நாட்டில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக, அந்த நாட்டில் உள்ள மக்கள் கடல்மார்க்கமாக இந்தியாவிற்குள் கடந்த சில வாரங்களாக நுழைந்து வருகின்றனர். தற்போது, அசாதாரண சூழல் நிலவி வருவதால் இந்தியாவிற்குள் நுழைவோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள மக்கள் கடல் மார்க்கமாக தமிழ்நாட்டு மாரக்கமாக உள்ளே நுழைய வாய்ப்புள்ளதால் கடல் பகுதியில் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்திய கடற்படையுடன் இணைந்து தமிழ்நாடு காவல்துறையினரும் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையில் இருந்து சிங்களர்களும், தமிழர்களும் மட்டுமின்றி இலங்கையில் உள்ள சிறையில் உள்ள கைதிகளும் தப்பித்து வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் தமிழ்நாட்டிற்குள் நுழையும் அபாயம் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உளவுத்துறையினர் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, கடலோரப் பகுதிகளில் ரோந்து பணிகள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
முன்னதாக, இலங்கையில் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தை தொடர்ந்து அந்த நாட்டின் பிரதமராக பொறுப்பு வகித்த மஹிந்த ராஜபக்சே பதவிவிலகினார். மேலும், அவரது குடும்பத்தினருடன் அவர் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்று விட்டதாகவும், வெளிநாடு தப்பிச்செல்ல கடற்படை தளத்தில் பதுங்கியிருப்பதாகவும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. மேலும், கோத்தபய ராஜபக்சே பதவி விலகினால் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என்று சஜித் பிரேமதாசா கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க : OPS: ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல்! 2018ல் சொன்ன ஸ்டாலின்.. இன்று? - பெட்ரோல் விலை குறித்து ஓபிஎஸ் அறிக்கை!
மேலும் படிக்க : 87 வயதில் 10, 12 வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற முன்னாள் முதல்வர்.. ஒரு சுவாரஸ்யம்..
மேலும் படிக்க : Tamilnadu Weather: 13 மாவட்டங்களுக்கு இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் கொடுத்த கூல் அப்டேட் !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்